இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கர்த்தரே தேவன் . அவருடைய பரிசுத்தத்தையும் வல்லமையையும் நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஆனால் தேவனுடைய கிருபையின் எண்ணி முடியாத நிதரிசம் இதுதான்: சீனாய் மலையிலே இடிமுழக்கங்களின் நடுவில் , இப்பிரபஞ்சத்தை அற்புதமான வகையிலே உண்டாகிய தேவன் பேசினதாவது , நம்மை நேசிக்கிறார், நாம் நெருங்கி சேர்ந்து அவரண்டையிலே அடைக்கலம் பெற வேண்டும் என்று ஏங்குகிறார். பயத்துடனே கர்த்தரைச் சேவித்து , நடுக்கத்துடனே களிகூரலாம் .நாம் பரிசுத்த பயத்துடன் அவரை துதித்து . நாம் பாதுகாப்பாக இளைப்பாறலாம் , ஏனென்றால் நமது நம்பிக்கை மாம்சதிற்குரியது அல்ல , தற்காலிகமானதும் அல்ல மற்றும் அழிந்துப்போககூடியதும் அல்ல . கர்த்தரே எங்கள் தேவனாய் இருக்கிறார் !

என்னுடைய ஜெபம்

பிதாவே,தகாத பேச்சாலும், பொறுப்பற்ற நடத்தையாலும் உமது கிருபையை நான் துச்சமாய் எண்ணிய காலங்களுக்காக என்னை மன்னியுங்கள் . நீர் ஒருவரே தேவன் . நீர் ஒருவரே போற்றத்தக்கவர். பரிசுத்தமாகவும் வல்லமையுடனும் இருப்பது மட்டுமல்லாமல், அருகில் இருந்து எனக்கு அடைக்கலத்தையும் பாதுகாப்பையும் அளித்ததற்காக உமக்கு நன்றி. அன்புள்ள பிதாவே , நீர் என்னுடைய தேவனாக இருப்பதற்காக உமக்கு கோடான கோடி நன்றி! இயேசுவின் திருநாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து