இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"பரிசுத்தம்" என்பது நாம் பொதுவாக "கறை படிந்த கண்ணாடி " உடன் தொடர்புபடுத்தும் வார்த்தைகளில் ஒன்றாகும் - இது "சபை ஜனங்களுக்கு " மாத்திரமே பயன்படுத்தபடுகிறது. அது உண்மையாக கூட இருக்கலாம், ஆனால் அது இன்னும் ஒரு சிறந்த கருத்தாகும் . நீங்கள் வெண்மையான பீங்கான் தட்டில் சிற்றுண்டி அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவதில்லை என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியும். நம் தாயாருடைய வெண்மையான புது பீங்கான் தட்டு ஒரு "விசேஷமான நபருடன்" அல்லது ஒரு "விசேஷமான நாட்களுக்காக" பிரத்யேட்கமாக ஒதுக்கப்படுள்ளது. சிற்றுண்டி காகித தட்டில் அனுதினமும் உண்ணக்கூடியது ஆனால் வெண்மையான பீங்கான் தட்டு ஒரு சிறப்பான நிகழ்ச்சிக்கு என்று உண்டாகப்பட்டது. தேவன் நம்மை பரிசுத்தத்திற்காக அழைக்கும்போது, ​​அவர் நம்மை அந்த வெண்மையான பீங்கான் தட்டை போல இருக்க வேண்டும் என்று அழைக்கிறார் - அவரைப்போல, அவருக்காக அவருக்கென்று ஒரு சிறப்பான மக்களாய் இருக்கவேண்டுமென்று பேதுருவும் வலியுறுத்துகிறார்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்த ஆண்டவரே, சர்வவல்லமையுள்ள தேவனே , உமது பரிசுத்தத்திற்கும் எனது பொதுவான வாழ்க்கைக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு பெரியது என்பதை அறிந்து நான் உமக்கு முன்பாக வருகிறேன். இயேசுவின் பலியின் மூலமாய் என்னைப் பரிசுத்தப்படுத்தியதற்காகவும், உமது பரிசுத்த ஆவியை எனக்குள்ளாய் வாழும்படி அனுப்பியதற்காகவும் உமக்கு நன்றி தெரிவிக்கிறேன். இன்றே என் ஜீவனை உமக்கு பரிசுத்த காணிக்கையாக ஏற்றுகொள்ளும்படி கேட்கிறேன். ஆதியும், அந்தமும், இன்னுமாய் பரிபூரணமுமான இயேசுவின் நாமத்தினாலே அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து