இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்முடைய செய்தி நம்மை குறித்தது அல்ல. இயேசுவே ஆண்டவர் . ஒரு நாள் அனைத்து சிருஷ்டிப்புகளும் அவரை ஏற்றுக்கொண்டு துதிக்கும். ஆனால் இன்று நம்மைச் சுற்றியுள்ள ஜனங்கள் இயேசுவை துதிப்பதற்கு , அவர் நமக்குள் ஜீவனுடன் வாசமாயிருப்பதை காண வேண்டும். இயேசுவின் நாமத்தினாலே மற்றவர்களுக்கு ஊழியம் செய்கிறோம். நாம் அவருடைய சரீரம் - இரக்கத்தின் கரங்களாகவும் , கிருபையுள்ள இருதயமாகவும் மற்றும் அவரது சாந்தமுள்ள வார்த்தையாகவும் இருக்கிறோம் . ஆகவே, இயேசுவை உயர்த்துவோம் - அவரைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்வதன் மூலம் மட்டுமல்ல, உலகில் அவருடைய ஜீவனுள்ள கிரியையாக இருந்து மற்றவர்களுக்கு ஊழியம் செய்வோம்.

என்னுடைய ஜெபம்

கிருபையின் தேவனே , உம்முடைய மகா மேன்மையான அன்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பாக்கியத்திற்காக உமக்கு நன்றி. என் பாவத்திலிருந்து என்னை மீட்டதற்காகவும் உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தினாலே மற்றவர்களை ஆசீர்வதிக்கும் ஊழியத்தை செய்யும்படி என்னை பிரித்து எடுத்தற்காகவும் உமக்கு நன்றி. என் இரட்சகராகிய இயேசுவின் நாமத்தினாலே அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து