இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அன்பு! இந்த வார்த்தை அநேக காரியங்களை குறிக்கும். கிருஸ்தவர்கள் அநேகர் அதை அகராதி அல்லது வேறு வழிகளில் வார்த்தையினால் வரையறுக்க முயல்கின்றனர் , அன்பின் முக்கிய வார்த்தையான அகபே ( மனுஷர்கள் மீது பிதாவாகிய தேவனின் அன்பு, அதே போல் தேவனின் மீதான மனுஷனின் பரஸ்பர அன்பு) இது கிரியையினால் வரையறுக்கப்படுகிறது என்பதை உணரவில்லை. கிறிஸ்தவர்கள் அகபேயைப் பிடிப்பதற்கு அல்லது விலக்குவதற்கு முன்பு, இன்று நம்முடைய வார்த்தை என்ன செய்கிறது என்பதையே இது குறிக்கிறது: எல்லா கிரியையும் உள்ளடக்கியது ! ஆனால் நீங்கள் 1 யோவான் புத்தகத்தை படித்தால், தேவன் என்ன செய்கிறார் என்பதன் மூலம் அன்பு என்னவென்று நீங்கள் பார்க்கிறீர்கள். தேவன் தனது அன்பை வெளிப்படுத்துகிறார். நாமும் நம் சகோதர சகோதரிகளுக்கும் அவ்வாறே செய்யும்படி கேட்டுக்கொள்கிறார். வார்த்தையினல் மாத்திரம் பேசுவதை விட அன்பு அதிகமாக இருக்க வேண்டும்; அது உண்மையாக கிரியையினால் காண்பிக்க பட வேண்டும்!

என்னுடைய ஜெபம்

விலையேறபெற்ற பிதாவே , உம் கிருபையினால் அன்பை என்னுடன் பகிர்ந்து கொண்டீர்கள். நான் ஒப்புக்கொள்ளுகிறேன் , என் இருதயத்தில் நான் உம்மைப் போலவே மற்றவர்களையும் நேசிக்க விரும்புகிறேன், ஆனால் எனது நோக்கங்கள் பெரும்பாலும் "பரபரப்பு " ​​அல்லது தைரியம் இல்லாததால் அநேக வேளைகளில் நோக்கத்தை விட்டு தூரம் போகிறேன் . பிதாவே , உமது ஆவியின் மூலமாய் , சிந்தித்துப் வார்த்தையினால் பேசுவதைக் காட்டிலும் கிரியையினாலும் என் அன்பை மற்றவர்களுக்குக் காண்பிக்க என்னைத் பெலப்படுத்தி உற்சாகப்படுத்தும் . உம்முடைய அன்பின் மிகப்பெரிய நிரூபணமாகிய இயேசுவின் மூலமாய் அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து