இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீல நிற இறக்கைகளுடன் பறக்கும் ஆரஞ்சு காண்டாமிருகத்தைப் பற்றி நீங்கள் நினைப்பதை நான் விரும்பவில்லை. இப்போது அதை விட்டு விலகு. நீங்கள் இனி அதைப் பற்றி யோசிப்பதை நான் விரும்பவில்லை.நீல நிற இறக்கைகளில் பறக்கும் ஆரஞ்சு காண்டாமிருகங்கள் எதுவும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். நிச்சயமாக சொல்ல வேண்டிய கருத்து மிக எளிது: நாம் எதையாவது செய்யாமல் இருக்க முயற்சிக்கும் போது, ​​அதில் அதிக கவனம் செலுத்தி, மாறாக நாம் செய்யக்கூடாததைச் செய்வோம். அதனால்தான் பரிசுத்த ஆவியின் ஈவு மிகவும் இன்றியமையாதது. அவர் நாம் பாவத்தை கடந்து செல்ல பெலனையும், அதிகாரத்தையும் அளிக்கிறார் - அதில் கவனம் செலுத்துவதன் மூலமோ அல்லது அதை மறுப்பதன் மூலமோ அல்ல, மாறாக நம்மை செழிதோங்க செய்வதன் மூலமும், தேவனின் இன்றியமையாத காரியங்களை கொண்டு நம்மை "திசைதிருப்புவதன்" மூலமும் அப்படி செய்கிறார்.

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , என்னில் வாசம் செய்து இப்போதும் எனக்காக உங்களோடு பரிந்து பேசும் உமது பரிசுத்த ஆவிக்காக நான் உமக்கு மிக்க நன்றி செலுத்துகிறேன் . தயவு செய்து என்னை உம் ஆவியால் நிரப்புங்கள், இதனால் எனது வாழ்க்கை உம்முடைய சித்தத்தை பிரதிபலிக்கிறது மற்றும் உம்முடைய காரியங்களில் அதிக கவனம் செலுத்துகிறது. என் ஞானஸ்நானத்தின்போது உமது ஆவியை என்மீது ஊற்றிய இயேசுவின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து