இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசு தம் சீஷர்களிடம் அவர்களின் மோசமான சூழ்நிலையில் ஆறுதல் கூற வருகிறார் - கடலில் வீசும் புயல். அவர் அவர்களிடம், "நான் இருக்கிறேன், பயப்படாதிருங்கள் " என்று கூறினார். இங்கே நாம் கவனிக்க வேண்டிய இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன. முதலில், மோசேயையும் இஸ்ரவேலர்களையும் எகிப்திலிருந்து விடுவித்த தேவனோடிருந்த தன்னை அடையாளப்படுத்தும்படி தன்னை ஒரு பெயரின் மூலமாக ("நான்") இயேசு என்று பயன்படுத்துகிறார். இரண்டாவதாக, வேதாகமம் முழுவதிலும் காணப்படும் வியக்கத்தக்க ஒரு கட்டளையைப் பயன்படுத்துகிறார்: "பயப்படாதே." நமது புயல் போன்ற பிரச்சனைகளின் மற்றும் குழப்பங்களின் மத்தியில் இயேசுவானவரை நம் வாழ்வில் அழைக்க நாம் தயாராக இருக்கும் போது, ​​அவர், "நான் இருக்கிறேன், பயப்படாதே!" என்று மாத்திரம் கூறாமல், அவர் நமது மிக முக்கியமான மற்றும் இறுதி இலக்கான ( பரலோகத்தின் ) வழியையும், நித்திய விடுதலையையும் கண்டறியபடி உதவுகிறார்.

என்னுடைய ஜெபம்

தேவனே , மகாபெரியவரே, நீர் இஸ்ரவேலை எகிப்திலிருந்து மீட்டு, தாவீதுக்கு பெரிய ஜெயத்தை கொடுத்தீர் , இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினீர். என் வழியில் வரக்கூடிய எல்லாவற்றிலிருந்து நீர் என்னை விடுவிக்க முடியும் என்று எனக்குத் நன்றாய் தெரியும். இப்படி பட்ட விசுவாசத்தை பெற்ற நான் தைரியமாக செயல்படாதபோது தயவுக் கூர்ந்து என்னை மன்னித்து, உம் சமூகத்தை இன்னும் அதிக பெலத்துடன் அடியேன் நம்புவதற்கு என்னை உற்சாகப்படுத்துங்கள் . இயேசுவின் மகத்தான நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து