இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் ஒரு அன்பான சிருஷ்டிகரால் உருவாக்கப்பட்ட சிருஷ்டிகள் என்றாலும், நாம் மிருகஜீவன்களை காட்டிலும் மிகவும் விசேஷித்தவர்களாய் இருக்கிறோம். மற்ற சிருஷ்டிகளுடன் ஒப்பிடும்போது மனுஷனுக்கு மாத்திரம் தனித்துவமான மற்றும் விசித்திரமான காரியங்கள் உள்ளது. தேவன் நமக்கு மிருக ஜீவன்களை ஆளும்படி அதிகாரத்தை கொடுத்தார். ஆனால் "ஆளுகை " என்பது அவைகளை அழிக்க அல்லது துஷ்பிரயோகம் என்று பொருட்படாது ! சிருஷ்டிப்பு என்பது தேவனின் தன்னை குறித்து அவர் கொடுக்கும் சாட்சியின் ஒரு பகுதியாக இருப்பதால் (சங்கீதம் 19:1-4; ரோமர் 1:20), அந்த அழகான சாட்சியை நாம் அழிக்கவோ அல்லது சிதைக்கவோ முற்படக்கூடாது . தேவனின் சாயலில் உருவாக்கப்படுவதென்றால், தேவன் பயன்படுத்தும் கிருபையை , இரக்கத்தை மற்றும் கனிவான பார்வையை போலவே நாமும் அந்த சிருஷ்டிப்பின் மேல் ஆளுகை செய்ய விரும்பவேண்டும் .

என்னுடைய ஜெபம்

பிதாவே , உம் சிருஷ்டிப்பின் அனைத்து அழகையும் பார்க்க எனக்கு தெளிவான கண்களை தாரும் . வீண் விரயம் மற்றும் துஷ்பிரயோகத்திலிருந்து என்னைக் காத்தருளும். என்னையும் என்னைச் சுற்றியுள்ளவர்களையும் நீர் உதாரத்துவமாக ஆசீர்வதித்து கொடுத்த இயற்கை வளங்களைச் சரியாகப் பயன்படுத்த எனக்கு ஞானத்தை தாரும் . எல்லாவற்றிற்கும் மேலாக, அடியேன் எடுக்கும் எந்த ஒரு முடிவும் உம் சிருஷ்டிப்புக்கு நன்மையாகவும், உதவிகரமாகவும், ஜீவனைக் கொடுக்கும் நல்ல பாதிப்புகளை உண்டாக்கும் வகையில் இருக்கும்படி என்னை வழிநடத்துங்கள். எனது வாழ்க்கை முறை மற்றும் தனிப்பட்ட தேர்வுகள் உம் சிருஷ்டிப்பில் காணப்படும் உம் கரங்களின் அழகை ஒருபோதும் சேதப்படுத்தாமல் இருக்கும்படி உதவிச்செய்யும் . இயேசுவின் நாமத்தினாலே நன்றி செலுத்தி ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து