இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீங்கள் தாழ்மைப்படுங்கள். அது அருவருப்பாய் தோன்றும். குறைந்தபட்சம் " எப்படியாவது முன்னேறுங்கள் " மற்றும் உங்களுக்கான போட்டி அதிகரிக்கிறது,ஆகையினால் திரும்பி பார்க்காதீர்கள் ஆகிய இப்படிப்பட்ட சுயவிளம்பர கலாச்சாரம் தான் அருவருக்கத்தக்தாக தோன்றுகிறது. பணிவு என்ற குணாதிசயம் மறந்தாயிற்று. பயம் மற்றும் பலவீனம் ஆகிய இந்த காரியங்களினால் நமக்கு நாமே குழப்பமடைகிறோம் . பணிவு என்பது இந்த உலகிலே நம்மை மிகைப்படுத்தாமல் நம்முடைய சரியான இடம் இன்னதென்று அறிந்துக்கொள்வதேயாகும். தேவன் மாத்திரமே நம்மை நிரந்தரமாக உயர்த்த முடியும், ஆகையால் அவருக்கு முன்பாக நம்முடைய சரியான இடம் இன்னதென்று அறிந்துகொள்வதே முக்கியமானதாகும், அவரைக் மகிமைப்படுத்த அவர் தேர்ந்தெடுக்கும் இடத்தில் அவர் நம்மை வைக்கட்டும்.

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , மிகவும் பரிசுத்தமான தேவனே , உம்முடைய சமூகத்திலே என்னை அனுமதித்ததற்காக உமக்கு நன்றி. நீர் உண்டாக்கின அனைத்தையும், நம்பமுடியாத அண்டசராசரத்தையும் நீர் உருவாக்கி, உம்முடைய வார்த்தையால் நிலைநிறுத்தினதை நான் நினைக்கும் போதும் , ​​​​நீர் அடியேனை உம்முடைய பிரசன்னத்திற்கு அழைத்தது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை தருகிறது. என் வார்த்தைகளின் தேர்வில் கூட நீர் அக்கறை காட்டுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. என்னை தெரிந்துக்கொண்டு , என் வாழ்க்கைக்கான திட்டத்தை வைத்திருந்ததற்கும் உமக்கு நன்றி. எல்லாவற்றிலும் நான் உம்மை மகிமைப்படுத்த முற்படுகையில், மற்றவர்களுக்கு முன்பாக மனத்தாழ்மையுடனும் கிருபையுடனும் வாழ இந்த நாளில் எனக்கு உதவிச்செய்யும் . இயேசுவின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து