இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

யோனா கீழ்ப்படியாதவன் , எதிர்த்துப்பேசுகிறவன் , சுயநலவாதி மற்றும் பாராபட்சமான மனம் கொண்டவன் . வெறுக்கப்பட்ட தன் எதிரிகள் மனந்திரும்பியபோது தேவனால் காப்பாற்றப்பட்டதை பார்க்க மனதில்லாமல் அவன் கர்த்தரிடமிருந்து விலகி ஓடினான் . அவர் வெறுத்த நினிவே மக்களுக்கு தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தியைப் பிரசங்கிக்கவும், மனந்திரும்புவதற்கு அழைப்பு விடுக்கவும் கர்த்தரின் கட்டளையையும் திட்டத்தையும் அவர் புறக்கணித்தார். அவர் ஒளிந்துகொண்டு தேவ திட்டத்திலிருந்து தப்பிக்க முயற்சி செய்து கப்பலில் இருந்தவர்களின் உயிருக்கு ஆபத்தை வருவித்தான் . ஆனாலும் அவன் தேவனுடைய வார்த்தைக்கு எதிர்த்து நின்றபோதிலும் , தேவன் அவனுடைய அழுகையின் குரலை கேட்டு அவனை அந்த இடுக்கனிலிருந்து விடுவித்தார். நீங்களும் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் எதிர்த்து நின்று , ஏதேனும் இரகசிய பாவத்தின் காரணமாக மறைந்திருந்தால் அல்லது உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய அழைப்பின் திட்டத்திற்கு பதிலளிக்காததற்காக வெட்கப்படுகிறீர்கள் என்றால், தயவுசெய்து இதை அறிந்து கொள்ளுங்கள்: கர்த்தர் உங்கள் நன்மைக்காகவும், அவருடைய மகிமைக்காகவும் உங்களை மீட்கவும், விலையை கொடுக்கவும் , விடுதலை பண்ணவும் விரும்புகிறார், இன்னுமாய் அதினால் மற்றவர்களின் இரட்சிப்புக்காகவும் செய்கிறார் ! தேவனிடம் திரும்புவது என்பது பாவத்திலிருந்து விடுதலை பெறுவதாகும் . அப்படி நீங்கள் திரும்பி வரும்போது அவர் உங்களை வரவேற்க ஆவலாய் இருக்கிறார் . யோனாவின் வாழ்க்கையின் மூலமாய் நமக்கு விளங்குவது என்னவென்றால் , உங்கள் இரட்சிப்பு உங்களுக்கு ஆசீர்வாதமாய் மாத்திரமல்ல, உங்கள் மூலமாய் தேவன் சந்திக்க விரும்பும் யாவருக்கும் அது ஆசீர்வாதமாய் அமையும் !

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் நீதியுமுள்ள பிதாவே, உமது சித்தத்திற்கு நான் எதிர்த்து நின்ற காரியம் நடப்பித்த காலங்களுக்காக அடியேனை மன்னித்தருளும் . அப்படிப்பட்டதான நேரங்களையும், காரியங்களையும் அடியேன் அடையாளம் கண்டு, அந்தச் சோதனைகளை மேற்கொள்ள எனக்குப் பெலன் தாரும். அன்பான பிதாவே, நீர் விரும்புகிறபடி அடியேன் வாழ எனக்கு உதவியருளும் , உமது கிருபையையும், மீட்பையும் அறிய வேண்டிய காத்திருக்கும் வேறொருவரிடம் என்னை உம் கிருபையினால் வழிநடத்துங்கள். பாவம் மற்றும் அவமானத்தின் அடிமைத்தனத்திலிருந்து தப்பிக்க என்னைப் பயன்படுத்துங்கள். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து