இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அவருடைய மனம் அலைபாய்வதில்லை ! இந்த வார்த்தை நமக்கு ஆறுதல் அளிக்கிறது அல்லவா? தேவன் நிலையானவர், அவர் எப்பொழுதும் நல்ல வரங்களைத் தருகிறவர் . உலகத்தை அதன் மகத்துவம் நிறைந்ததாய் உண்டாக்கி அதை நாம் ஆண்டுக் கொள்ளும்படி கொடுத்தார். பாவம் நம் ஜீவனை நெரித்தபோது, ​​தேவன் அவருடைய வாக்குத்தத்தத்தை நமக்கு அளித்து, அதை ஆபிரகாம் மற்றும் இஸ்ரவேலர்கள் மூலமாக நிறைவேற்றினார். மரணம் நம்மை விழுங்க நினைக்கும் போது, ​​பாவம் மற்றும் மரணத்தின் மீதான நமது வெற்றியின் நிச்சயத்தைத் தருவதற்காக, சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவை அவர் நமக்காக தந்தார். அந்த பிரகாசமான ஒளியிலே யாதொரு நிழலின் வேற்றுமை இல்லை, அந்த ஒளி எப்பொழுதும் பிரகாசிக்கும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்!

என்னுடைய ஜெபம்

கிருபையும், மிகுந்த தயவுமுள்ள சர்வவல்லமையுள்ள தேவனே , உமது கிருபையையும், உமது ஈவுகளையும், உமது அன்பையும், உமது வாக்குறுதிகளையும் எனக்கு தொடர்ந்து அளித்ததற்காக உமக்கு நன்றி. எனக்கு யாரும் இல்லை; உம்முடன் ஒப்பிடும் அளவிற்கு என்னிடம் எதுவும் இல்லை. இயேசுவின் திரு நாமத்தினாலே உம்முடைய அநேக ஈவுகளுக்காக நன்றி செலுத்தி ஜெபிக்கிறேன் ! ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து