இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

என்ன ஒரு மேன்மையான கருத்து ! என்ன ஒரு உயர்ந்த விருப்பம் ! ஆச்சரியமான சவால்! இயேசுவில் இருந்த சிந்தையே எனக்குள்ளும் இருக்க வேண்டும். இது நம்முடைய கற்பனைக்கு அப்பாற்பட்டது. ஆனால் அதைப்போலவே சற்று கூர்ந்து கவனியுங்கள் , தேவனானவர் நம்மை இந்த மகிமையுள்ள , உயர்ந்த மற்றும் நினைத்துப் பார்க்க முடியாத உயரத்திற்கு அழைக்கிறார், ஏனென்றால் அவர் நம்மை தம்முடைய பிள்ளைகளென்று அழைக்கிறார். நாம் தேவனுடைய புத்திரர்கள் ! அவருடைய குமாரனாகிய இயேசுவைப் போலவே நாம் தாழ்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதாவது, நாம் நமது மேன்மையான காரியங்களை தேடாமல் , மாறாக அவர்களை ஆசீர்வதிக்க மற்றவர்களுக்கு நம்மையே ஒப்புக்கொடுக்க தயாராக இருக்க வேண்டும்!

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள நித்திய பிதாவே, இயேசுவின் மூலம் நீர் காண்பித்த அளவிட முடியாத கிருபைக்காக உமக்கு கோடான கோடி நன்றி. அவருடைய ஊழியம் செய்யும் மனப்பான்மை, கீழ்ப்படிதல் மற்றும் தியாகம் என் உள்ளத்தில் ஊடுருவி, மற்றவர்களிடம் என் அனுதின ஜீவியத்தில் நன்மை பயக்கும் தாக்கத்தை உண்டாக்கட்டும் . கர்த்தாதி கர்த்தரும் ஆண்டவரும், இரட்சகரும் அனைவருக்கும் ஊழியம் செய்யும்படி வந்த இயேசுவின் நாமத்தினாலே ஜெபம் செய்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து