இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் ஒவ்வொருவரும் தேவனின் சிருஷ்டிகளாய் இருக்கிறோம் . அவர் நமது ஆதி முன்னோர்களை பூமியின் மண்ணினாலே வடிவமைத்து உருவாக்கினார். தாயின் கருவினில் இருக்கும்போதே அவர் நம் ஒவ்வொருவரையும் உருவாக்கி , ஆராய்ந்து அறிந்திருகிறார்.(சங்கீதம் 139:13-16). முதல் மனிதனாகிய ஆதாமைப் போலவே, தேவன் நம்மை அவருடைய சுவாசத்தை தந்து , அவருடைய ஜீவனை கொடுத்து ஆசீர்வதிக்கிறார். நாம் அவருடைய கரங்களின் கிரியையாகவும் மற்றும் அனந்தமான ஞானத்தினால் உண்டாக்கி , அவர் நமக்கு ஜீவன் தந்து , அதிலே பரிபூரணப்படவும் சிருஷ்டிக்கப்பட்டோம் (யோவான் 10:10) மற்றும் நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம். (எபேசியர் 2:10).

என்னுடைய ஜெபம்

அன்பான தேவனே, நீர் அளித்த என் வாழ்க்கைக்காக உமக்கு நன்றி, தயவு செய்து யார் ஒருவரும் அல்லது எந்த ஒரு காரியமும் உம்மை கனப்படுத்துவதிலிருந்து என் இருதயத்தை விலகி போகாதபடி செய்யும் . சாத்தானானவன் அடியேனை உம்முடைய பிள்ளை என்ற உணர்வை குலைத்துப் போடாதபடி செய்யும். நாங்கள் ஜீவிக்கிற இவ்வுலகில் உள்ளவர்கள் மீது உமது பரிசுத்த தாக்கத்தை உண்டுப்பண்ண அடியேனுடைய வாழ்க்கையை கிறிஸ்துவுக்குள் எ மீண்டும் ஜெநிப்பித்ததற்காக உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தினாலே , நீர் எனக்கு ஜீவன் கொடுத்தது போல் உமக்காகவும் வாழ நான் உறுதியளித்து ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து