இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

எப்பொழுதும் அன்புகூருங்கள் — ஒரு பெரிய மலையைப்போல கடினமான காரியம் தான். தேவன் மாத்திரமே எப்பொழுதும் அன்புக்கூருகிறார். ஆனால் கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியின் மூலமாய் எப்போதும் அன்பிற்கு ஏவப்படுகிறார்கள் ! வேறொரு இடத்தில், பவுலானவர் இப்படியாக கூறுகிறார், "மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது." ( ரோமர் 5:5) இந்த அன்பு எப்பொழுதும் நிலைத்திருப்பதில் ஆச்சரியமில்லை — இது தேவனின் அன்பு, இயேசுவுடைய பலியால் நிரூபிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியால் விடுவிக்கப்பட்டது!

என்னுடைய ஜெபம்

உன்னதமான, மதுரமான மற்றும் மகிமையுள்ள தேவனே , அன்பு கூறுவதற்கான உம் மகா வல்லமையையுள்ள ஆற்றலையும் காண்கிறேன், என்னைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையில் அன்பின் நம்பமுடியாத தேவையையும், நான் நேசிக்கும் குறுகிய திறனையும் எண்ணி உமக்கு முன்பாக நான் என்னைத் தாழ்த்திக் கொள்கிறேன். தயவு செய்து உமது பரிசுத்த ஆவியை என் இருதயத்தில் ஊற்றி, உம்மைப் போலவே எப்போதும் அன்பு செலுத்தும் பெலத்தினால் என்னை நிரப்ப கேட்கிறேன் . இயேசுவின் இனிய நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து