இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவின் சீஷர்களை நாம் எவ்வாறு அடையாளம் கண்டு கொள்ளலாம் ? கிறிஸ்தவர்களை எப்படிக் கண்டுகொள்வது ?.... அவர்கள், இயேசு அவருடைய சீஷர்களை நேசித்தது போல் அவர்களும் ஒருவரையொருவர் நேசிக்கிறவர்களாய் இருக்கவேண்டும். இந்த கால சூழலில் நமக்காக இயேசு சிலுவையில் மரித்ததின் மூலம் அவர் பலியாகவும், அதிகப்படியாகவும் நமக்கு கொடுக்க தயாராக இருக்கிறார், மேலும் அவர் அவர்களின் கால்களைக் கழுவினதன் மூலம் தன்னலமற்ற மற்றும் நடைமுறையில் அன்பு செலுத்தவும் தயாராக இருக்கிறார் என்பதும் விளங்குகிறது . ஆடம்பரத்திற்கும் நடைமுறைக்கும் இடையில் அவர் எதையும் செய்வார் என்பதை அவரது ஊழியம் வெளிப்படுத்துகிறது. நாம் அனைவரும் நற்செய்தி சுவிசேஷத்தை படித்து, இயேசு தம்முடைய சீஷர்களிடம் அன்பைக் காட்டியதைப் போலவே நாமும் ஒருவரையொருவர் நேசிக்க உறுதிபூண்டிருந்தால் , இயேசுவுக்கு சீஷர்களாயிருப்போம்.... என்பதை கற்பனை செய்து பாருங்கள்!

என்னுடைய ஜெபம்

ஆறுதலின் தகப்பனும் மற்றும் கிருபையின் தேவனே , இயேசுவின் முன்மாதிரியின் மூலம் எனக்கு அன்பைக் கற்றுக் கொடுத்ததற்காக உமக்கு நன்றி. இன்றும், நாளையும், இன்னுமாய் எங்கள் அனைவரையும் உம் நித்திய வீட்டிற்கு அழைத்து செல்லும் வரை, எனது வார்த்தைகளும் செயல்களும் உம் ஜனத்தின் மீது அவர் கொண்ட அன்பைப் பிரதிபலிக்கட்டும். என் சிறந்த மாதிரியாகிய கிறிஸ்துவின் நாமத்தினாலே , நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து