இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பிரபஞ்சத்தை சிருஷ்டித்த சர்வவல்லமையுள்ள தேவன், நமக்குள் வாழ்வது எவ்வளவு பெரிய கனம் பொருந்திய காரியம் என்பதை நம்மால் கற்பனை செய்ய முடிகிறதா! நாம் ஒருவரையொருவர் நேசிக்கும்போது, ​​ என்ன நடக்க வேண்டுமோ அது தானாகவே நடக்கும்.நம் இதயங்கள் அன்பினால் நிறைந்திருக்கும் போது, ​​தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; நம் இதயம் அன்பினால் நிறைந்திருக்கவில்லையெனில் , ​​நாம் தேவனுக்கு சிறிய இடத்தை விட்டுவிட்டு, அவருடைய தன்மையை நம்மில் உருவாக்குகிறோம். இன்றே பிறருக்காக அன்பான காரியங்களைச் செய்வோம் என தேவனிடத்தில் ஒப்புவித்து , அவருடைய அன்பை நமக்குள் பூரணப்படச் செய்வோமாக.

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , நீர் என்னுடனே இருக்கிறீர் என்பதை அறிவது மிகவும் ஆறுதலாக இருக்கிறது - நான் உம்மில் வாழ்கிறேன், நீர் என்னில் வாழ்கிறீர்கள். மற்றவர்களை நீர் எப்படி பார்க்கிறீரோ அவ்வண்ணமே நானும் அவர்களை உம் கண்களால் பார்க்கவும், அவர்களின் தேவைகளுக்கு உம் இதயத்தால் பதிலளிக்கவும் எனக்கு உதவுங்கள், இதனால் உம் அன்பு என்னில் முழுமையாக இருக்கும். எல்லாருடைய ஊழியரும் இரட்சகருமான இயேசுவின் நாமத்திலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து