இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

விடாய்த்து போன காலங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு தேவனிடமிருந்து இந்த உறுதியளிக்கப்பட்டது - தேவன் தம் மக்களை அவர்களின் பாவ வழிகளில் இருந்து மனந்திரும்புவதற்கு வழிவகுத்த நேரங்கள். அவர்களுடைய தேசம் பலனை கொடாமலும் , கொள்ளைநோயினாலும், மோசமான பஞ்சத்தினால் பாழடைந்து போயிற்று . இருப்பினும், அவர்கள் முழு மனதுடனே அவரிடம் திரும்பினால், தேவனானவர் அவர்களை ஆசீர்வதிப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறார் . இஸ்ரவேலின் உடன்படிக்கையின் தேவனாகிய கர்த்தர், தம்முடைய ஜனங்களை அவர்களுடைய மனந்திரும்புதலினாலும், தேவனுடைய கிருபையின் வல்லமையினாலும் மீட்டுக் கொண்டுவர பெரிய காரியங்களைச் செய்வதாக வாக்களித்தார். அப்பொழுது தேசம் மகிழ்ந்து களிகூரும் . அதுபோலவே அவருடைய ஜனங்களும் இருப்பார்கள் ! அதுபோலவே நாமும் இருக்க வேண்டும்! இந்த தீர்க்கதரிசன நிறைவேறுதலின் ஒரு பகுதி அப்போஸ்தலர் 2ஆம் அதிகாரத்தில் முதல் முதல் சபை உருவானபோது அது பெந்தெகொஸ்தே நாளில் நடந்தது (அப்போஸ்தலர் 2:22-47). இந்த வாக்குத்தத்தத்தின் அடிப்படையில் "கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார்" என்பதை நாம் அறிவோம்.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பரலோகத்தின் தகப்பனே, உலகமெங்கிலும் அனைத்து மக்களிடையேயும் நீர் செய்த ஆச்சரியமான கிரியைகளுக்காக உமக்கு நன்றி. நீர் உண்டுப்பண்ணின பெரிய உலகில் நாங்கள் கையிட்டு செய்யும் சிறிய காரியங்களில் உம் வல்லமையுள்ள கிரியைக்காக நன்றி. இயேசுவுக்குள்ளாய் நீர் அளித்த மீட்புக்காக நன்றி. அவர் மரணத்தை வென்றதற்காக நன்றி. உம் ஆச்சரியமான கிருபை மற்றும் இரக்கத்தின் வெளிப்பாட்டிற்காக நன்றி. எங்களுக்குள் வாசம் செய்யும் உம் பரிசுத்த ஆவியின் ஈவுக்காக உமக்கு நன்றி. உம் ஆவியினால் ஏவப்பட்ட மற்றும் இன்னும் எங்களுக்கு போதிக்க பயன்படுத்தும் வேதவாக்கியங்களுக்காக நன்றி. உம் திருச்சபை என்று அழைக்கப்படும் உம் நண்பர்களின் குடும்பத்திற்காக நன்றி. இந்த கிருபையை எங்களிடம் கொண்டு வந்து தலைமுறை தோறும் நீர் ஏற்படுத்தின உம் உடன்படிக்கைக்கு உண்மையுள்ளவராக இருந்ததற்காக நன்றி. இயேசுவின் நாமத்தினாலே நன்றி செலுத்தி ஜெபிக்கிறேன் ! ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து