இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசு மக்களை அறிந்திருந்தார் . அவர் குறிப்பாக ஜனக்கூட்டத்தை அறிந்திருந்தார் மற்றும் மக்கள் எவ்வளவு நிலையற்றவர்களாகவும் சுயநலவாதிகளாகவும் இருக்கிறார்கள் என்று. பொது வெளிகளில் மக்கள் பார்க்கும்படியாய் அல்லது மெச்சிக்கொள்ளும்படியாய் இருக்க விரும்பும் மக்களுக்கு இயேசுவானவர் ஊழியம் செய்யவில்லை, அப்படி நொறுங்குண்டவர்களை குணப்படுத்தவில்லை, அல்லது அப்படிப்பட்ட மக்களுக்கு சத்தியத்தை கற்பிக்கவில்லை. நம்முடைய சுயநலமான நிலையற்ற சுபாவம் நற்குணம், அர்ப்பணிப்பு, இரக்கம் என மறுரூபம் ஆகும்படி விரும்பினார். எனவே, ஒரு நபராக எவ்வாறு சிறப்பாக வாழ்வது என்பதை நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம் என்றால், தொடங்க வேண்டிய இடம் இயேசுவானவர் . இரக்கமுள்ளவர்களாக இருப்பது எப்படி என்பதை நாம் தெரிந்துகொள்ள விரும்பினால், இயேசு தன்னைச் சுற்றியுள்ள நொறுங்குண்ட மக்களுக்கு எப்படி ஊழியம் செய்தார் என்பதை நாம் கவனிக்கிறோம். நாம் தேவனுக்காக உண்மை உத்தமத்துடன் வாழ விரும்பினால், நாம் இயேசுவின் மீதும் பிதாவாகிய தேவனுக்கு அவர் முழுமனதோடே உத்தம இருத்தயத்தோடே வாழ்ந்ததில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நாம் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றி அவருடைய போதனைகளுக்கு முழுமையாய் கீழ்ப்படிய வேண்டும். இந்த வாழ்க்கை முறை - அல்லது கிறிஸ்துவின் வாழ்க்கை முறையாகும் , நான் அழைப்பது போல் - இது எளிதானது அல்ல. இருப்பினும், இது மெய்யானது மற்றும் பரிசுத்த ஆவியானவர் நம்மை எப்போதும் அவரைப்போல் மறுரூபமாவதற்கு வடிவமைத்துள்ளதால், இயேசுவோடு மறுரூபமாகும் பயணத்தில் பங்கேற்க நம்மை அழைக்கிறது (2 கொரிந்தியர் 3:18). இயேசு நம்மை அறிந்திருப்பதால் நாம் அவரை எப்பொழுதும் நம்பலாம் என்பதை நாம் அறிந்துகொள்ளும்போது, ​​அதிக ஆழமும், செழிப்பான அர்த்தமும் கொண்ட வாழ்க்கையை கண்டுபிடிப்போம். அவரை நாம் பின்பற்றி, இந்த வாழ்க்கையைக் கண்டறிய இயேசுவானவர் நம்மை அழைக்கிறார், நமக்குள் என்ன இருக்கிறது என்பதையும், நாம் அவரைப் போல ஆக வேண்டும் என்பதையும், வாழ்க்கையை அதன் முழுமையிலும் ஆச்சரியத்திலும் காண வேண்டும் என்பதையும் இயேசு ஒருவரே அறிவார் என்பதை உணர்ந்து, நம்மை அழைக்கிறார் (யோவான் 10:10).

என்னுடைய ஜெபம்

பிதாவே, நாங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதைக் காண்பிக்கவும் , உம்முடைய சத்தியத்தை எங்களுக்கு போதிக்கவும் உமது நேச குமாரனை இவ்வுலகிற்கு அனுப்பியதற்காக உமக்கு நன்றி . உமது விலையேறப்பெற்ற நேச குமாரனும் என் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நல்ல நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து