இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒருபோதும் தனித்து விடப்படுவதில்லை ! என்ன ஒரு வாக்குத்தத்தம் . தேவன் அவர்களோடும் , நம்முடனும் வாழ்வின் எல்லா காலங்களிலும் , நமது ஏற்றத் தாழ்வுகளிலும் , சோதனைகளிலும், வெற்றிகளிலும்,இன்னுமாய் மரணத்திலும் நம்முடனே இருக்கிறார் (பார்க்க சங்கீதம் 139). எனவே நாம் பெலன்கொண்டு திடமனதாயிருந்தால் அவருடைய வல்லமையை உணரலாம். நாம் எப்பொழுதும் தனித்து விடப்படுவதில்லை!

என்னுடைய ஜெபம்

இருப்பவரும் இருந்தவரும் வரப்போகிறவருமாகிய தேவனே , மற்றவர்கள் அனைவரும் அடியேனை கைவிட்டு, புறக்கணித்த வேளைகளில் என்னுடனே இருந்து,தங்கியதற்காக உமக்கு நன்றி. மாற்றம் நிறைந்த என் வாழ்வில் நீர் மாத்திரமே நிலையானவராய் இருந்தமைக்காக உமக்கு நன்றி . உம்மை மகிமைப்படுத்தவும், உம்மை பற்றி மேன்மேலும் அறிந்து கொண்டு, எனது கடமைகள் மற்றும் உறவுகளில் மேலும் உறுதியாய், உண்மையுள்ளவனாக இருப்பதற்கு எனக்கு உதவிச்செய்யும் . இயேசுவின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து