இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

என்ன ஒரு வியக்கத்தக்க கருத்து ! தேவனின் தெரிந்துக்கொள்ளப்பட்ட மற்றும் பரிசுத்த பிள்ளைகளாக நாம் மிகவும் நேசிக்கப்படுகிறோம். உருக்கமான இரக்கம், தயவு , மனத்தாழ்மை , சாந்தம் ,நீடிய பொறுமை ஆகிய வாழ்க்கை முறைக்கு தேவன் நம்மை அழைப்பதில் ஆச்சரியமில்லை! இந்த நற்குணங்களை நம் பிதா எத்தனை முறை நம்மிடம் பயன்படுத்த வேண்டும் என்று சிந்தியுங்கள்! தேவன் முன்னமே நம்மிடம் ஏராளமாய் பகிர்ந்துள்ளதை நாம் எப்படி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியும்?

என்னுடைய ஜெபம்

பரலோகத்திலுள்ள பிதாவே , என்னையும் மிகவும் மேன்மையுள்ளவனாக எண்ணியதற்காக உமக்கு கோடான கோடி நன்றி. அடியேன் எந்தெந்த காரியங்களிலே எப்படிஎப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீரோ, அவற்றில் நான் குறைவுப்பட்டு காண்கிறேன் ஆயினும் என்னை உம் அன்பான மற்றும் பரிசுத்தமான பிள்ளையாக நீர் தெரிந்துக்கொள்ள விரும்பாததற்கு அநேக காரணங்கள் உன்டென்று அறிந்திருந்தாலும், நீர் என்னை மிகவும் அளவுக்கதிகமாக நேசிக்கிறீர் , இயேசுவுக்குள் அடியேனை மகிமை படுத்தியுமுள்ளீர் ! அன்பு, உருக்கமான இரக்கம், தயவு , மனத்தாழ்மை , சாந்தம் , நீடிய பொறுமை ஆகியவற்றால் நிரம்பி- என்னை இயேசுவைப் போலவும், உம்மைப் போலவும் ஆக்குவதற்கு உமது பரிசுத்த ஆவியின் மூலமாய் என்னில் வல்லமையுடன் செயல்படுங்கள். தயவுக்கூர்ந்து இதை என்னில் உருவாக்கும் , அதனால் நான் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாகவும், உமக்கு மகிமையையும் கொண்டு வர முடியும். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து