இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசு, அந்த நாமத்திலே ஏதோ ஒன்று இருக்கிறது!"அவராலேயன்றி வேறொருவராலும், வேறொன்றிலும் இரட்சிப்பு இல்லை. உடைக்கப்பட்ட இன்னுமாய் நொறுக்கப்பட்ட காரியங்களிலிருந்து இப்படிபட்டதான இரட்சிப்பு இவ்வுலகிலே ஒருபோதும் உண்டாகவில்லை ; அவரே நம்முடைய இரட்சகர் ஏனென்றால் அவர் தாமாகவே இவ் உலகத்திற்கு வந்து, நம்முடைய எல்லா பெலவீனங்களையும், பாவத்தையும், அவமானத்தையும், மீறுதல்களையும் அவர் சுமந்து அவைகள் எல்லாவற்றிலும் வெற்றிச்சிறந்தார்.

என்னுடைய ஜெபம்

நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தின் மூலமாய் , என் ஆண்டவரே, உன்னதமான தேவனே அடியேன் உமக்கு நன்றி செலுத்துகிறேன். உமது அன்பு என் பாவத்திற்கான பலியை அளித்தது, உமது வல்லமை எனக்கு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலின் உறுதியை கொடுக்கிறது. உம்முடைய குமாரன் வாழ்நாள் முழுவதையும் எங்களுடன் செலவழிக்கத் தயாராக இருப்பது, எனது போராட்டங்களிலும், பெலவீனங்களிலும் எங்களுக்காக பரிவுடன் பரிந்து பேசும் ஒரு பிராதான ஆசாரியரை அளித்துள்ளது. அவருடைய மாதிரி உம்முடைய மேலான அன்பை எனக்குத் தெரியப்படுத்துகிறது. எங்கள் மீது கிருபையாய் இருந்து ஒரு அற்புதமான இரட்சகரை எனக்கு வழங்கியதற்காக உமக்கு கோடான கோடி நன்றிகளை செலுத்துகிறோம் தேவனே . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Verse of the Day Wall Art

கருத்து