இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அந்த ஜெப கூட்டத்திற்கு நான் எதை தரித்துக் கொள்ள வேண்டும் என்று ஆச்சரியமாக இருக்கிறதா? " தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே என்பதை பவுல் நமக்கு நினைவூட்டுகிறார்(கொலோ 3:10). நாம் அவைகளை தரித்துக்கொள்ளுகிறோம், ஏனென்றால் நாம் விசேஷத்தவர்கள். இந்த அநேக காரியங்கள் உன்னதமானவருடைய நற்பண்புகளை, உள்ளடக்கிய குணாதிசயம் எனப்படும், அவைகளை மற்ற ஜனத்தோடு பகிர்ந்துக்கொள்ளும் போது மிக சிறந்ததாக இருக்கும். இந்த குணாதிசயத்தை தரித்துக்கொள்ளுவது கடினம் ஆயினும் அவைகளை முற்றிலுமாய் தரித்துக்கொள்ளும் வேளைகளில் அநேக ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளுவோம்.

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , என்னை உம்முடைய இராஜ்ஜியத்தில் சேர்த்ததற்காக உமக்கு நன்றி. நான் மற்றவர்களை நடத்தும் விதத்தில் உம்மை ஒருபோதும் ஏமாற்ற வேண்டாம். என் வாழ்வில் உமது பிரசன்னம் என்னுடன் இருப்பதை உணர்ந்து கொள்ளும் குணாதிசயத்தை அவர்கள் என்னில் காணட்டும். என் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே, என்றென்றும், மகிமையும் கனமும் புகழ்ச்சியும் உண்டாவதாக. ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து