இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவின் மகத்துத்தையும் மற்றும் தியாகத்தையும் இரண்டையும் நீங்கள் எவ்வாறு புரிந்துகொள்கிறீர்கள்? இந்த மாதம் முழுவதும் நாங்கள் எங்கள் தேவனின் அடையாளத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம், இன்னும், அவருடைய மகிமையான மற்றும் தாழ்மையான குணத்தால் நாங்கள் ஆச்சரியப்படுகிறோம், மகிழ்ச்சியடைகிறோம் , திகைப்படைகிறோம், ஆசீர்வதிக்கப்படுகிறோம். இருப்பினும், முக்கிய விஷயம் என்னவென்றால், அவர் ஒரு பரிபூரண பரலோகத்திற்கும் பெலவீனமுள்ள மனிதகுலத்திற்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்தினார். கல்வாரியின் கொடுரத்தை சிலுவை மரத்தில் இரத்தம் சிந்தியபோது நமது குற்றத்தையும் அவமானத்தையும் தாங்கிக் கொண்டு அவர் இந்த சமாதானத்தை உண்டுப்பண்ணும்படி ஒரு மாபெரிதான விலையைக் கொடுத்தார். தேவனுடைய சித்தத்தை கனப்படுத்தவும் , உங்கள் மீதும் என் மீதும் கொண்ட அன்பின் நிமித்தமாக இயேசு இதைச் செய்தார்.

என்னுடைய ஜெபம்

பிதாவே , என் பாவத்திற்கான பலியாக, இயேசு இவ்வளவு பெரிய பலியைச் செலுத்த நேர்ந்ததற்காக நான் வருந்துகிறேன். எனது மீட்பின் அதிக விலையைச் செலுத்த உம் அன்பு உம்மை வழிநடத்தியதற்காக நான் எப்பொழுதும் நன்றியுள்ளவனாக இருப்பேன் . உமக்கும் எனக்கும் இடையே என் பாவம் ஏற்படுத்திய தூரத்தைக் குறைத்ததற்காக நான் உம்மைப் போற்றுகிறேன். என் இரட்சிப்பு இயேசுவின் வாழ்விலும், மரணத்திலும், உயிர்த்தெழுதலிலும் எனக்குக் கொடுக்கப்பட்ட கிருபையின் ஈவு என்பதை நான் அறிவேன். இன்று நீர் என்னில் மகிழ்ச்சியடைந்து, என்னைக் காப்பாற்றிய உமது விலையுயர்ந்த கிருபைக்கான துதியின் பலியாக என் வாழ்க்கையைக் காண்பாய். இயேசுவின் நாமத்தினாலே , நான் உமக்கு நன்றி கூறி ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து