இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனை கனப்படுத்தாத மற்றும் அவருக்கு கீழ்ப்படியாத காரியங்களை கை விட்டுவிட விரும்பாததால் அநேகர் தேவனை நிராகரிக்கிறார்கள். அவர்கள் அதை சரி என்று நிரூபிக்க ஒரு உலக அறிவினால் வாக்குவாதம் செய்கிறார்கள் , ஆனால் உண்மையான பிரச்சினை என்னவென்றால், அவர்கள் தங்கள் விருப்பத்தை தேவனிடம் முழுமையாக ஒப்படைக்க விரும்புவதில்லை என்பதே பொருளாகும் . அதாவது தேவனுடைய தன்மை மற்றும் அவருடைய சித்தத்திற்கு முரண்படும், அவர்கள் விரும்பும் விஷயங்களை விட்டுவிடவேண்டும் . அநேக சுவிசேஷகர்களுக்கு இப்படி உலக அறிவார்ந்த வாதங்கள், இந்த வகையான நபரை சத்தியத்திற்கு வெல்வது அரிது அல்லது சத்தியத்திற்கு வழி நடத்துவது கடினம் என்பது தெரியும். அதற்கு பதிலாக, அவர்கள் இயேசுவையும் அவர்களிடமுள்ள அவருடைய மாறாத தியாக அன்பையும் முன்னதாக அறிந்துகொள்ள வேண்டும், ஏனென்றால் அவர்களில் பரிசுத்தத்திற்கான தேவனின் கோரிக்கை, அவர் தங்கள் சத்துரு அல்ல, ஏனென்றால் அவர் தங்கள் கூட்டாளியாக இருக்கிறார். சாத்தானானவன்அவர்களின் அழிவை விரும்புகிறான். பரலோகத்திலுள்ள நம்முடைய பிதா அவர்களுடைய இரட்சிப்பை விரும்புகிறார்.

Thoughts on Today's Verse...

So many people reject God because of the things they do not want to give up to honor and obey him. They may couch it in an intellectual argument, but the real issue is that they do not want to surrender their will to God. That would mean giving up things they love that conflict with the character and will of God. Many evangelists know that intellectual arguments seldom win this kind of person to the truth. Instead, they must come to know Jesus and his sacrificial love for them before they admit that God's demand for holiness in them is because he is their ally, not their enemy. The evil one wants their destruction. Our Father in heaven wants their salvation.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் சர்வவல்லமையுமுள்ள தேவனே , உமது அன்பிற்காகவும் பரிசுத்தத்திற்காகவும் நான் உம்மைப் போற்றுகிறேன். என்னை இரட்சிக்க இயேசுவானவரை அனுப்பியதன் மூலம் இவ்விரண்டையும் வெளிப்படுத்தியதற்காக நன்றி. எனது பரிசுத்தமான நடத்தை மிகவும் கோரமாக அல்லது கடுமையாக இருக்க வேண்டும் என்ற உம் சித்தத்தை நான் கண்ட நேரங்களுக்கு நான் வருந்துகிறேன். இயேசுவில் என்னைக் காப்பாற்றி, உமது பாதுகாப்பு மற்றும் கவனிப்பின்கீழ் பரிசுத்தமான வாழ்க்கைக்கு என்னை அழைக்கும் அளவுக்கு என்னை நேசித்ததற்கு நன்றி. இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Holy and almighty God, I praise you for your love and holiness. Thank you for demonstrating both by sending Jesus to save me. I regret the times I saw your desire for my holy behavior to be too demanding or harsh. I thank you for loving me enough to save me in Jesus and call me to a holy life under your protection and care. In Jesus' name, I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of கொலோசெயர்- 1:21

கருத்து