இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பழிவாங்குதல் என்பது அப்பாவி மக்களை மற்றும் குற்றவாளிகளை ஆகிய இருவரையும் அழிக்கும் சாத்தானின் வழியே ஆகும் . பழிவாங்குதல் உந்துதலாக மாறியவுடன், காயமடைந்த நபர், திடீரென்று ஆத்திரத்திலும் வெறுப்பிலும் அழிக்க வகைதேடுவர் . பழிவாங்கும் நோக்கத்தை உடைய நபர் தொடும் அனைத்திலும் இந்த விஷம் பரவுகிறது. பூமியில், எல்லா நேரங்களிலும் நடைமுறையில் உள்ள நீதித்துறையின் "நன்மை" எதுவாக இருந்தாலும், நாம் ஒருபோதும் சரியான மற்றும் முழுமையான நீதியை பெறமாட்டோம் என்பதைக் காணலாம். ஆனால் தேவன் நீதியை மட்டும் கொண்டு வரமாட்டார்; அவர் எங்களை இரட்சிப்பார்: அடக்குமுறையாளர்களின் கைகளிலிருந்து எங்களை இரட்சிப்பார், வெறுப்பின் விஷத்திலிருந்து எங்களை இரட்சிப்பார்.

என்னுடைய ஜெபம்

எங்களை மன்னிக்கும் ஆண்டவரே, எல்லா நீதிக்கும், மாறா அன்புக்கும் தேவனே , நாங்கள் வாழும் பூமியில் உள்ள நீதியின் அமைப்பில் எங்களுக்கு தக்க நியாயம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதை மிகவும் சமமாகவும் உண்மையாகவும் ஆக்குங்கள். நீதியை விலைக்கு வாங்குபவர்களை அம்பலப்படுத்தி ஆட்சியில் இருந்து அகற்றுங்கள். வன்முறையாளர்களையும் ஒடுக்குபவர்களையும் உம் பலத்தக் கரத்தால் இடைக்கட்டியருளும் . தயவு செய்து, ஆண்டவரே, உமது ஆவியின் வல்லமையால், மற்றவர்களை மன்னிக்கவும், உமது நீதிக்காகக் காத்திருக்கவும் என்னைத் தூண்டும். மன்னிக்காத மற்றும் பழிவாங்கும் இருதயத்தின் விஷத்திலிருந்து என்னைக் காத்தருளும். என் குணாதிசயமும் , நடத்தையும், என்னைத் தவறாகப் புரிந்துகொள்பவர்களுக்கான பதில்களும், உமது குமாரனை இரட்சகராக அறிந்துகொள்ள அவர்களுக்கு உதவட்டும். அவருடைய நாமத்தினாலே , நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து