இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோவின் வரலாற்றுக் சம்பவங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் (தானியேல் 3:1-30). தேவன் அவர்களை அக்கினியிலிருந்து காப்பாற்றத் தேர்ந்தெடுப்பாரா? இல்லையா? என்பது அவர்களுக்கு தெரியாது ஆயினும் அவர்களின் நம்பிக்கை திடமானது மற்றும் அசைக்க முடியாதது. தேவன் அவர்களைக் காப்பாற்றியது மட்டுமல்லாமல், அவர்களை மரணத்துக்கு ஒப்புக் கொடுக்க எண்ணியவர்களே அவர்களின் நம்பிக்கையின் முக்கிய சாட்சிகளாகவும், தேவன் அவர்களை அற்புதமாக விடுவித்து அவர்களுடனே உலாவினார். இந்த மூன்று இளைஞர்களும் தங்களை ஒரே மெய்யான தேவனின் பிள்ளைகளாக தங்களை காண்பித்தனர் , மேலும் சர்வவல்லமையுள்ள தேவன் மற்றும் அவரது மதிப்புகள் மீதான மரியாதையை இழந்த ஒரு சமூகத்தில் பழகுவதற்கு நம் நம்பிக்கையை சமரசம் செய்ய ஆசைப்படும்போது நம் அனைவருக்கும் இவர்கள் மூவரும் நமக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கின்றனர்.

என்னுடைய ஜெபம்

அன்பான பரலோகத்தின் தகப்பனே, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் காட்டிய அதே நம்பிக்கையை எனக்கும் தாரும் ! துன்பம், துன்புறுத்தல், ஏளனம், புறக்கணிப்பு ஆகியவை வரும்போது, ​​என் நம்பிக்கை அந்த பரீட்சைக்கு எதிராக நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அன்புள்ள பிதாவே , தங்கள் நிலைப்பாட்டை நிலைநிறுத்தி, விசேஷமாக அக்கினியின் கீழ் தங்கள் விசுவாசத்தை காத்த என் விசுவாச நாயகர்களின் வரலாற்றை , வேதாகமத்தில் எனக்கு கொடுத்ததற்காக உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து