இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"கிறிஸ்தவர்கள் பூரணர்கள் அல்ல; அவர்கள் யாவரும் மன்னிக்கப்படுகிறார்கள்." நாங்கள் பூரணர்கள் அல்ல என்பது எங்களுக்கு நன்றாய் தெரியும். எங்களுடைய பெலவீனங்கள், குறைவுகள் , பாவம், அற்பத்தனம், முதிர்ச்சியின்மை, கோழைத்தனம் என அனைத்தையும் நாங்கள் அறிவோம்.. ஆனால் இயேசு சிலுவையில் தம்முடைய சரீரத்தைப் பலியிட்டு இரத்தம் சிந்தியபடி நம்மீது தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார். அவருடைய உன்னதமான பலியின் மூலமாக தேவன் நம்மை "பூரணர் " என்று பார்க்கிறார். இயேசுவின் பலியின் அர்த்தம் என்னவென்றால் , தேவனின் சமூகத்தில் நாம் பரிசுத்தமாகவும், பழுதற்றவர்களாகவும், குற்றமற்றவர்களாகவும் இருக்கிறோம்! இயேசுவின் பூரணமான பலியின் மூலமாக தேவனோடு நமக்கு ஒரு பரிபூரணமான ஒப்புரவாக்குதலை உண்டாக்கிற்று! தேவனானவர் நம்முடைய பாவத்தைப் பார்க்கவில்லை, ஆனால் இயேசுவின் பரிபூரணமாகிய பலியை பார்க்கிறார்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள பிதாவே , என் பாவங்களுக்காக, அக்கிரமங்களுக்காக என்னை மன்னியுங்கள். நான் பாவங்களினால் தோய்ந்து போகிறேன் , அவற்றை முழுமையாக மேற்கொள்ள முடியாத எனது சொந்த இயலாமையால் நான் விரக்தியடைகிறேன். அன்பான பிதாவே , என்னை பெலப்படுத்துங்கள், இதனால் சோதனையை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் தைரியமும், வலிமையையும் எனக்குத் தாரும் . மகிமையின் தேவனே , இயேசுவை அனுப்புவதன் மூலம் உமது பரிபூரணத்தையும் மகிமையையும் என்னுடன் பகிர்ந்து கொண்டதற்காக நன்றி. தேவனே , என் கன்மலையே , என் மீட்பரே, நான் உம்மைப் போற்றுகிறேன், ஏனெனில் நீர் என்னை உமது பிள்ளையாக்கினீர்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே , நான் ஜெபித்து , துதித்து , நன்றி செலுத்துகிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து