இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மோசே இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்து வனாந்தரத்தின் வழியாய் நடத்திச் சென்றார், ஆனால் அவருடைய மீறுதலின் காரணமாக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் அவரால் பிரவேசிக்க முடியவில்லை. மோசே தனக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் அனுமதிக்கப்படாத போதிலும் கூட , தான் வழிநடத்திய வேளைகளில், இஸ்ரவேலை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு வெற்றிகரமாக வழிநடத்தக்கூடிய ஒரு நபரை பக்குவப்படுத்தி வளர்த்து ஆயுத்தப்படுத்தியிருந்தார்: பிரயாணத்தின் இந்த முக்கியமான பகுதிக்கு யோசுவா இஸ்ரவேலின் புதிய தலைவராக இருந்தார், மேலும் மோசேயால் எப்படி சீர்படுத்தப்பட்டு,ஆயத்தப்படுத்தப்பட்டு, எப்படி வழிநடத்துவது என்பதைக் அறிந்திருந்தார். நம்மால் முடியாததை அல்லது செய்ய முடியாததைச் செய்யக்கூடிய ஒருவரை நாம் ஆயத்தம் செய்ய வேண்டும் என்பதை யோசுவா நமக்கு நினைப்பூட்டுகிறார்! உங்களால் செய்ய முடியாததைச் செய்ய நீங்கள் யாரைப் பயிற்றுவிக்கிறீர்கள், சீர்படுத்துகிறீர்கள் , ஊக்கப்படுத்துகிறீர்கள், பெலப்படுத்துகிறீர்கள் , சித்தப்படுத்துகிறீர்கள், உறுதிப்படுத்துகிறீர்கள்? உங்கள் கனவுகளின் பாதையை நீட்டிக்க உங்களுக்கு பின் யார் இருக்கிறார்கள்? உங்களின் யோசுவா யார்?

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் நீதியுமுள்ள தேவனே , நான் யாருடன் என் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளவும் மற்றும் உம் விசுவாதத்தின் கீர்த்தியை கடத்த விரும்புகிறீர்களோ அவர்களுடன் என்னை வழிநடத்துங்கள் . அவர்களைப் பார்க்கும்படி என் கண்களைத் திறந்தருளும். அவர்களுக்கு முன்பாக உண்மையும், உத்தமும் ,தைரியமாகவும் வாழ எனக்கு பெலன் தாரும் , அவர்களை ஆயத்தப்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து