இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசு எல்லாமுமாக இருந்தார், நமக்காக எல்லாவற்றையும் துறந்து ஒன்றுமில்லாதவராய் வந்தார் . ஆனால் அவர் பூமியிலே இரட்சிக்க வந்த மக்களில் பெரும்பாலானோர் அவரை அறியவுமில்லை அல்லது அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் இந்த பாடுகளை அன்பவிக்க தகுதியானவர் என்று அந்த ஜனகூட்டத்தினர் எண்ணினர் . பெரும்பாலானோர் வருத்தப்படவுமில்லை, மனம் மாறவும் இல்லை . ஆனால் அந்த கிருபை பலியின் வரலாற்று கதையில் ஏதோ ஒன்று இருந்தது, அது பல ஆண்டுகளாக இருதயங்களை ஈர்த்தது மற்றும் தேவனுடைய தொலைந்துபோன பிள்ளைகளின் வீடு என்று அழைக்கப்படுகிறது . நமது பரலோக வீட்டிற்கு செல்லும் பிரயாணத்தில், அவர் நமக்கு ஒரு இரட்சகராக மட்டுமல்லாமல், நமது இரட்சிப்புக்கான ஊழியராகவும் இருப்பதைக் காண்கிறோம்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே, என்னை மீட்கும்படியாய் உமது திட்டத்தை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. எதற்கு உம்முடைய விலையேறப்பெற்ற ஒரேபேரான குமாரனை தேர்ந்துதேடுத்து இந்த உலகத்துக்கு அனுப்பி அவமானங்களையும், நிந்தைகளையும் அனுபவிக்கும்படியாய் செய்தீர் என்று என்னால் ஒரு போதும் புரிந்துகொள்ள முடியவில்லை. இது எனக்குத் நன்றாய் தெரியும்: நீர் அடியேனை நித்திய அன்பினால் நேசிக்கிறீர்கள், அவருடைய மாபெரிதான பலிக்காக நன்றி செலுத்தும் வகையில் எனது முழு ஆத்துமாவோடும், பெலத்தோடும் நான் உமக்கு ஊழியம் செய்வேன். உம்முடைய அளவற்ற அன்பிற்காக உமக்கு நன்றி. என் ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து