இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுடைய சித்தத்தின்படி மற்றவர்களை தன்னிடம் கொண்டு வரச் சிலுவையைப் பயன்படுத்துவது மிகச் சிறந்த "பைத்தியமான" காரியமாக இருந்தது . முதல் பார்வையிலே , சிலுவை ஒரு கோரமான மற்றும் பயங்கரமான கருவியாகும் . நமது மனித ஞானத்தில், சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளியாகிய ஒரு மனிதனை உலகத்தில் உள்ள ஜனங்களின் இருதயங்களை ஆட்கொள்ள பயன்படுத்துவதை நாம் ஒருபோதும் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆனால் தேவன் செய்து முடித்தார். சிலுவையானது கலாச்சார எல்லைகள், வேற்றுமையான மொழிகள் மற்றும் இன வேறுபாடுகள் ஆகிய இவைகளை கடந்து செல்கிறது. பைத்தியமும், பெலவீனமும் ஆகிய இவ்விரண்டையும் சிலுவையைக் கொண்டு தேவன் விளங்கச் செய்தார் (1 கொரிந்தியர் 1:18-25), அதன் மூலமாக , இயேசு மரணத்தை ஜெயித்து நம் இருதயங்களை அவரிடம் கொண்டு வந்தார்.

என்னுடைய ஜெபம்

பிதாவே , இந்த நாளிலலே , அநேகர் விளையாட்டுகள் மற்றும் தந்திரங்கள் மூலமாக முட்டாளாக மாறும் போது, ​​இயேசுவோடு கல்வாரியில் "பைத்தியமும் ", "பெலவீனமும் " எனக்கு வலிமையாக நினைவூட்டப்படுகிறது. உமது அன்பினால் என்னைத் தொட்டு, உமது கிருபையின் நிச்சயத்தால் என்னை நிரப்பினார் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. பிதாவே உமக்கு நன்றி ! நீர் என்னை மிகவும் நேசிக்கிறீர் என்று அறிந்து நான் முற்றிலும் ஆச்சரியப்படுகிறேன். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து