இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒரு சில அல்லது பல வேளைகளில் , நம்மில் பெரும்பாலானோர் கோபத்திலே கரத்தை உயர்த்தி இருளை சபிப்போம் . இந்த செயல்கள் ஒவ்வொன்றும் சமமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். ஆனால் தேவன் இல்லை என்று மறுதலிப்பது முற்றிலும் வேறு விஷயம். பரலோகத்தின் தேவனை வஞ்சிப்பது என்பது கிருபை , நம்பிக்கை மற்றும் எதிர்காலத்தை இன்னுமாய் நம்மை நாமே வஞ்சிப்பதாகும். பிரம்மிக்கதக்க விதமாய் , ஒழுங்காய் , பலவகையாய் , அழகுள்ளதாய் , வல்லமையாய் , ஒரு மாதிரியின் படியாய் உண்டாக்கின சிருஷ்டிப்பின் பின்னால் சிருஷ்டிகர் இருக்கிறார் என்பதை மறப்பது எவ்வளவு பெரிய மதியீனம் . அவர் தமது கைவேலையை விட மிகப் பெரியவர், ஆகையால் நாம் அவரைப் புறக்கணிக்கவோ, மறுக்கவோ, நிராகரிக்கவோ கூடாது .

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , சிருஷ்டிகரும், நிலை நிறுத்துகிறவருமாகிய ஆண்டவரே பரலோகத்தில் இருப்பது மட்டுமல்லாமல், இன்று என்னுடன் இருப்பதற்காகவும் உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து