இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

முயற்சி, வியர்வை மற்றும் அர்ப்பணிப்பு ஆகிய காரியங்கள் மேற்கத்திய கிறிஸ்தவத்தின் குலைச்சளாக மாறிவிட்டன. உண்மையான சீஷத்துவத்திற்கு கீழ்ப்படிதலுள்ள விசுவாசத்தின் கிரியை அவசியம் இல்லை என்கிறவர்கள் கிருபை- கேலி செய்பவர்கள் மற்றும் கிருபையை ஒரு பொருட்டாக என்னதாவர்களை, பரிசுத்த ஆவியானவர் தனது சத்தியத்தை கொண்டு சந்திக்க முற்படுகிறார் . பூமியிலுள்ள உறவுகளுக்கு, இயேசுவின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் கூட, பொறுமையான முயற்சி, உறுதியான அன்பு, தனிப்பட்ட தியாகம், இரக்கத்தோடு கூடிய மன்னிப்பு மற்றும் நிலையான உறுதிப்பாடு தேவை என்பதை ஆவியானவர் நமக்கு நினைப்பூட்டுகிறார். யோவான் 17:1-ல் இயேசுவின் ஐக்கியத்திற்கான ஜெபத்தை நாம் படித்தால், அவருடைய சரீரத்தை ஒருமைப்படுத்தவும், ஒருவருக்கொருவர் அன்பாகவும் பொறுமையாகவும் இருக்க எப்படி நம்மால் எல்லா முயற்சிகளையும் செய்ய முடியாது? இயேசு தனது வியர்வையினால் , கிருபையை கொண்டு மற்றும் அவருடைய இரத்தத்தினால் நமது இரட்சிப்பை விலை கொடுத்து வாங்கினார் என்பதால், இயேசுவின் குடும்பத்தின் ஒற்றுமையையும் அமைதியையும் காக்க நமது உணர்ச்சிமிக்க முயற்சிகள் தேவைப்படும்போது நாம் எவ்வாறு அவைகளை தடை செய்ய முடியும்?

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பரலோகத்தின் பிதாவே , மற்றவர்களுடன் நான் பொறுமையற்றவனாக இருப்பதையும், அவர்களை நான் மன்னிக்காமல் இருப்பதையும் அடியேனுக்கு மன்னித்தருளும் . பரிசுத்த ஆவியானவரே, இந்தக் காரியங்களில் இன்னும் சிறப்பாக விளங்க என் இருதயத்தை மாற்றியருளும் . என் நாவைக் அடக்கவும் , என் இருதயத்தை இரக்கம் நிறைத்ததாகவும் , உமது ஆசீர்வாதம் தேவைப்படும் மற்றவர்களுக்கு அதிக கவனத்துடன் நடத்த உமது ஆவியை எனக்குள் உற்சாகப்படுத்தும் . தயவு செய்து, அன்பான பிதாவே , உமது ராஜ்யத்தில் சமாதானம் செய்பவராக எப்பொழுதும் என்னைப் எடுத்து பயன்படுத்தும் . ஆண்டவரே, இவைகள் யாவற்றையும் இயேசுவின் நாமத்தினாலே கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து