இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவினுடைய சிலுவையின் வல்லமை அரிமத்தியா ஊரைச் சேர்ந்த ஐசுவரியவானாகிய யோசேப்பு மற்றும் இஸ்ரவேலின் சிறந்த போதகரான நிக்கொதேமு ஆகிய இரண்டு மனிதர்களின் வாழ்வில் நிரூபிக்கப்பட்டது, இவர்கள் அவருடைய பூமிக்குரிய ஊழியத்தில் இயேசுவின் சீஷராக தன்னை முழுமையாகக் காட்டிக்கொள்ளாமல் அந்தரங்க சீஷராக வாழ்ந்து வந்தனர் . நம்முடைய இருதயத்தை தொடுவது போல, வேறு எந்த ஒரு காரியமும் செய்ய முடியாதபோது சிலுவை அவர்களுடைய இருதயத்தை தொட்டது! இயேசுவின் மரணத்திற்குப் பிறகு, இந்த இருவரும் தனிப்பட்ட முறையில் இயேசுவுக்கு முறையான அடக்கம் செய்யப்பட்டதை உறுதிசெய்கிறார்கள், இதனால் பஸ்கா பண்டிகையின் வாரத்தில் தங்களுடைய பரிசுத்ததை உறுதிசெய்தார்கள் , மேலும் அவர்கள் அவ்வாறு செய்து கடினமான நேரத்தில் தேவனுக்கு விசுவாசமாய் இருப்பதை நிரூபித்து காட்டினார்கள்.

என்னுடைய ஜெபம்

நீதியுள்ள பிதாவே , சிலுவை சபிக்கப்பட்ட கொடூரமான அடையாளம் என்று எனக்குத் தெரியும். அது எனக்கு, எவ்வளவு பயங்கரமானது ஆயினும் விலையேறப்பெற்றது , எவ்வளவு அருவருப்பானதோ, அந்த அளவிற்கு அழகானது. சிலுவையின் மூலமாக , நீர் அடியேனை பாவத்திலிருந்து இரட்சித்தீர் மற்றும் எவ்வளவாய் நேசிக்கிறீர் என்பதை விளங்கச்செய்தீர் . பிதாவே,அதற்காக நன்றி! உம்மையும், கல்வாரியின் மூலமாய் நீர் அளித்த வியக்கத்தக்க ஈவையும் மகிமைப்படுத்த எனது வாழ்க்கையை ஏதேனும் ஒரு சிறிய வழியில் பயன்படுத்தியருளும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து