இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மிகுந்த சந்தோஷம் என்பது ஒரு உகந்த அல்லது ஏற்றதான வார்த்தையாய் இருக்காது. இப்போது ஒவ்வொரு கனவுகளும் தகர்ந்த பிறகு, இயேசுவினுடைய அப்போஸ்தலர்கள் சாத்தியமற்றதைக் கண்டு, நினைத்துப் பார்க்க முடியாத காரியத்தை அனுபவிப்பதினால் வாயின் வார்த்தையினால் சொல்ல முடியாத மகிழ்ச்சியை யாவரோடும் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வல்லமை அளவற்றது, அவர்களுடைய எதிர்காலம் எல்லைகளை கடந்தது. அவர்களுடைய போதகரான இயேசு, நம் அனைவருக்கும் ஆண்டவராய் இருக்கிறார் , அவர்களுடைய எதிர்காலம் அவருடைய கரங்களில் உள்ளது.

என்னுடைய ஜெபம்

வல்லமையுள்ள தேவனே , இயேசுவை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழச் செய்ததற்காகவும், ஒரு நாள் அடியேன் உம்மோடும், உம்மை நேசிப்பவர்களோடும், உம்முடைய வருகையை எதிர்நோக்கும் அனைவரோடும் இருப்பேன் என்ற உறுதிக்காகவும் உம்மைப் போற்றுகிறேன். மனுஷனால் கூடாததை செய்ததற்காகவும் , என்னால் கற்பனை செய்ய முடியாதவற்றின் மேல் எனக்கு நம்பிக்கை அளித்ததற்காகவும் உமக்கு நன்றி. இந்த வல்லமையை கொண்டு என்னுடைய குணாதிசயங்களை உம்முடைய சித்தத்திற்கும், கிறிஸ்துவின் மாதிரிக்கு ஒப்பாக இருக்கும்படியும் செய்தருளும் . கிறிஸ்து இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து