இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஆஹா, தேவன் மீதான நம்பிக்கையின் இந்த சங்கீதமானது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவுக்கூர்ந்த பிறகு, திடீரென்று அதற்கு மிகுந்த வல்லமையுள்ள வளையத்தைக் கொடுக்கிறது ! தேவன் நம்மை இரட்சிக்கிறார் . தேவன் நம் சத்தத்தைக் கேட்கிறார். அவர் நமக்கு இரட்சிப்பைக் கொண்டுவருவதற்குச் செவிசாய்த்து செயல்படுகிறார் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். தேவன் நமக்கு பதிலளிப்பார் என்று நம்பி, நாம் அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் அவரை நோக்கி கூப்பிடுகிறோமா என்பதே ஒரே கேள்வி.

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , அடியேனுடைய சொந்த வாழ்க்கையின் காரியங்களை குறித்து என் இருதயத்தில் உள்ள பாரங்களுக்கு உம்முடைய கிருபையும், பெலனும் தேவைப்படுகிறது . இந்தக் கவலைகளை உம்முடன் பகிர்ந்து கொள்ளும்போது, ​​தயவுகூர்ந்து என் சத்தத்தையும், இருதயத்தின் வாஞ்சையையும் கேளுங்கள்...(இன்று உங்களுடைய ஜெபங்களில் தனிப்பட்ட கவலைகளை தயங்காமல் தேவனிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.) மேலும், அன்பான பிதாவே , நான் யாரைப் பற்றி அக்கறையோடு இருக்கிறேனோ, அப்படிப்பட்ட மக்களை தயவுசெய்து உம் அன்பின் கரங்களால் தொட்டருளும். நீர் என் விண்ணப்பத்தின் சத்தத்தைக் கேட்டதற்காகவும் ,என்னை இரட்சித்ததற்காகவும் உமக்கு நன்றி. நான் யாருக்காக கவலைப்படுகிறேனோ அவர்கள் மீது நீர் அக்கறை செலுத்தியதற்காகவும் நன்றி. என் இரட்சகராகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து