இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இந்த உலக வாழ்க்கை நம்முடைய முடிவல்ல . இந்த உலகம் நம் நிலையான வீடும் அல்ல. இந்த உலகம் நம் வாழ்க்கை பிரயாணத்தின் ஒரு தற்காலிக இடமாகும் ! இங்குள்ள பல விஷயங்கள் நம் இலக்கிலிருந்து நம்மை திசைத் திருப்பலாம் மற்றும் நமது பிராயணத்தை முடிக்க வேண்டும் என்ற ஆசையை அழித்துவிடலாம் . இந்த வகையான கவனத்தை சிதறடிக்கும் காரியங்களும், பாவமான ஆசைகளும் உண்மையில் நம்முடன் போரிடுகின்றன. இருப்பினும், பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலமாக , நாம் " அவைகளுக்கு இல்லை!"என்று சொல்லலாம் . இருளாம் உலகில் சிக்கித் தவிக்கும் ஜனங்களுக்கு தேவனுடைய ஒளி மிகவும் தேவைப்படுகிறது, அப்படிப்பட்ட உலகத்தாருக்கு முன்பாக நாம் நம்பிக்கையுடனும் பண்புடனும் வாழ வேண்டியது அவசியமாகும் .

என்னுடைய ஜெபம்

பரிசுத்த தேவனே, பாவத்திலே அமிழ்ந்திருந்த நேரங்களுக்காக அடியேனை தயவுகூர்ந்து மன்னியுங்கள். சர்வவல்லமையுள்ள தேவனே , அடியேனை நீர் பெலப்படுத்துவதினால் , நான் உம்மைப் போல குணாதிசயத்திலும், பரிசுத்தத்திலும் வளர முடியும். அன்புள்ள தேவனே , என் சிநேகிதர்கள் , குடும்பத்தினர் மற்றும் அண்டை வீட்டார் ஆகியோரை வசீகரிக்கும் ஒரு பரிசுத்தமான வாழ்க்கையை வாழ எனக்கு உதவுங்கள், அதனால் அவர்கள் உமக்கு உகந்த வாழ்க்கையை வாழ்வதன் மூலம் உம்மை மகிமைப்படுத்துவார்கள். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து