இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற்றபோது, ​​அவருடனே சிலுவையில் அறையப்பட்டதில் பங்கடைந்து , ஒரு புது சிருஷ்டியாக எழுப்பப்பட்டோம். கிறிஸ்து நமக்குள் ஜீவனுள்ளவராய் இருக்கிறார். நாம் ஜீவிக்கிறதான இவ்வுலகில் கிறிஸ்துவின் காரியங்களை பிழைக்க செய்வதே ஒரு கடினமான சவால்! நாங்கள் உங்களை உற்சாகப்படுத்தும் நோக்கம் ? முன்னமே நாம் கிருபையினால் இரட்சிப்பை இலவசமாய் பெற்றுக்கொண்டோம் அவற்றை நாம் விலைக்கொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லை, மாறாக நம்மைக் மீட்பதற்காக அனைத்தையும் கொடுத்தவரை நாம் கனப்படுத்துவோம் (ரோமர் 6:1-14 ).

என்னுடைய ஜெபம்

தேவனே , என்னை நேசித்ததற்காகவும், என் பாவத்திலிருந்து என்னை மீட்க இயேசுவை அனுப்பியதற்காகவும் உமக்கு நன்றி. நான் உம்முடன் நித்திய வாழ்வு வாழ்வதற்காக , தன்னைக் கொடுத்த உம்முடைய குமாரன் மீது விசுவாசம் வைத்து வாழ்வேன் என்று இன்று உம்மிடம் உறுதியளிக்கிறேன். உம் ஆவியானவரின் மூலமாய் இயேசுவின் வாழ்க்கையை என்னில் பிரதிபலிக்க உதவிச் செய்தருளும். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபம் செய்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து