இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சில நாட்கள் மிகவும் கடினமானவை! அதைக்குறித்து கவலைப்படுகிறவர்கள் காயப்படுகிறார்கள் . எங்கள் திட்டங்கள் நொறுங்கி வீழ்ச்சியடைகின்றது . இரும்பினால் உண்டான சுவர் கொண்ட அறைக்குள் கைதுப்பாக்கியால் சுடப்பட்டது போல எங்கள் ஜெபங்கள் விழுந்து போயின . அவைகள் சுவர்கள் மற்றும் கூரையில் பட்டு எங்கள் காலின் கீழே விழுந்தன ,அதுபோல பயனற்ற-உணர்வுகள் நிறைந்த ஜெபங்கள் எங்கள் அறையிலிருந்து வெளியே செல்ல முயற்சிக்கும்போது அவைகள் நம்மைத் தடுமாறச் செய்கின்றன. நாம் தேவனை நோக்கி சத்தமிட்டு ஜெபிக்கிறோம் - சில நேரங்களில் கோபத்தில், சில சமயங்களில் விரக்தியில், ஆனால் குறிப்பாக அவருடைய இரக்கத்திற்காக கெஞ்சுகிறோம். நமக்கு மறுஉத்தரவு வேண்டும்! நம்பிக்கை வேண்டும்! நம்முடைய பிதாவாகிய தேவன் நமக்கு பதிலளிக்க வேண்டும். ஆகவே நாம், சங்கீதக்காரனாகிய தாவீதுடன் சேர்ந்து தேவனிடம் மன்றாடுவோமாக : "கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும், என் விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்தரவு அருளிச்செய்யும்." எங்கள் சிறந்த நாட்களில், கர்த்தர் எங்களுக்கு பதிலளிப்பார் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் காத்திருக்கிறோம்!

என்னுடைய ஜெபம்

உண்மையும் நீதியுமுள்ள தேவனே , அன்பான பிதாவே , பாவம், வியாதி , ஊக்கமின்மை, துரோக நண்பர்கள், என் அவமானத்திற்கும் அழிவுக்கும் உழைக்கும் எதிரிகள் போன்றவர்களுடன் என் போராட்டங்களில் எனக்கு உதவி செய்து எனக்கு அதிலிருந்து விடுதலையை கொடுங்கள். கர்த்தாவே, உம்முடைய உதவி எனக்கு மிகவும் அவசியமானது . அன்பான பிதாவே எனக்கு உம்முடைய அளவற்ற இரக்கங்கள் தேவை. அன்பான பிதாவே,சர்வவல்லமையுள்ள தேவனே , இன்று என் வாழ்க்கையில் உம்முடைய மாறாத சமூகமும், வல்லமையும் நான் அறிய வேண்டும். இயேசுவின் இனிய நாமத்தினாலே , நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து