இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இரண்டு காரணங்களுக்காக தேவனுடைய ராஜ்யத்தில் பயன்படுத்த நமக்கு ஈவுகள் வழங்கப்படுகின்றன: 1) தேவனுக்கு மகிமையை கொண்டுவர. 2) மற்றவர்களை ஆசீர்வதிக்கும்படி . நாம் உதவி செய்தாலும் சரி, போதித்தாலும் சரி, மேலே கூறின இந்த இரண்டு இலக்குகளை மனதில் கொண்டு, தேவன் நமக்கு தந்த ஈவை உபயோகிக்க தேவையான பெலத்தை வழங்குவார் என்பதை அறிந்து அதைச் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு தேவனுடைய ஆசீர்வாதத்தை கொண்டு வரும்படி நாம் செய்யும் உதவியும், சொல்லும் வார்த்தைகளும் , இந்த நல்ல ஈவுகளை நமக்கு கொடுக்கும் கிருபையுள்ள தேவனுக்கு மாத்திரமே உரியது! அவருக்கே எல்லா மகிமையும், கனமும் உண்டாவதாக.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள பிதாவே, என்னை இரட்சித்ததற்காகவும் , உமது மக்களை ஆசீர்வதிக்கவும் ,உம்மை கனப்படுத்துவதற்கும் எனக்கு எல்லா திறன்களையும் கொடுத்ததற்காகவும் உமக்கு நன்றி. இந்தப் ஈவுகளையும் திறன்களையும் நீர் விரும்புகிற வண்ணமாய் நான் பயன்படுத்தும் வழிகளை கண்டறிய எனக்கு உதவிச் செய்யும். நான் அவற்றைப் பயன்படுத்தும்போது இயேசுவின் நற்குணத்தையும் கிருபையையும் என் மூலமாக வெளிப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். அன்பான பிதாவே , உமது கிருபையின் ஆசீர்வாதங்களின் வழித்தடமாக இருக்க நான் ஏங்குகிறேன். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து