இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

வரி செலுத்தும் நேரத்தில் தேவன் நம்மை நம் விருப்பதின்படி விட்டுவிடுவது நல்லது அல்லவா? ஆனால் அவர் நம்மை அவருடைய குணாதிசயங்களான நன்மை செய்தல் , நேர்மையாக இருத்தல் , பரிசுத்தமாக வாழ்தல் ஆகிய நற்பண்புகளை தரித்து இவ்வுலகில் வாழ அழைக்கிறார். எனவே நாம் மற்றவர்களுக்கான நமது பொறுப்புகள் மற்றும் கடமைகளை உணர்ந்து அவற்றை கனம்பண்ணி , நமக்கான வரிகளை செலுத்தி , நமது நிதிக் கடமைகளை நிறைவேற்றி, நம் அரசாங்கத்திற்கு மரியாதை கொடுக்கிறோம் அல்லது கனம் பண்ணுகிறோம். அவ்வாறு செய்வதன் மூலம், நாம் நம் பிதாவை கனம் பண்ணுகிறோம். விழுந்துபோன உலகில் மீட்பு மிகவும் அவசியமானது , நாம் இந்த உலகில் தேவனின் பிள்ளைகளாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும், மாறாக அதற்கு ஒத்துவாழவோ அல்லது இணக்கமுடனோ வாழக் கூடாது .

என்னுடைய ஜெபம்

பரிசுத்த தேவனே , எனது சக குடிமக்களிடமிருந்தும் என்னிடமிருந்தும் வசூலிக்கும் வரிகளை இன்னும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த என் அரசாங்கத்தை ஆசீர்வதியுங்கள். என்னைச் சுற்றியுள்ளவர்களுக்குத் தகுதியானவர்களுக்கு மரியாதையையும்,கனத்தையும் காட்ட எனக்கு உதவுங்கள். எனது வாழ்க்கையின் பொது மற்றும் தனிப்பட்ட அரங்கில் உம்முடைய சித்தத்திற்கு நான் கீழ்ப்படிந்து வாழ விரும்புகிறேன். தயவு செய்து, அன்பான பிதாவே , அதற்கான தைரியத்தையும் ஞானத்தையும் எனக்குக் கொடுங்கள். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து