இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"எச்சரிக்கையாயிரு!" இது ஒரு சொற்றொடர் அல்ல, இந்த நாட்களில் நீங்கள் அதிகம் கேட்கும் ஒரு கட்டளையாகும் . எல்லா விஷயங்களும் இலகுவாக நடந்தேற வேண்டும் என்று நாம் யாவரும் விரும்புகிறோம். மாயமான நம்பிக்கையுள்ள உலகிலே உண்டாகும் வியர்வை மீது ஒரு வெறுப்பு உண்டாகும் . ஆனால், கிறிஸ்துவில் தேறினவன் ஆவதற்கு ஒரு மெய்யான முயற்சி தேவை என்பதை தீமோத்தேயுவும் (நாமும்) அறிந்துக்கொள்ள வேண்டும் என்று பவுலானவர் விரும்பினார் —பவுலானவர் கூறுவது போல "நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு." மற்றவர்களின் மீட்பின் மீது ஒரு தாக்கத்தை உண்டுபண்ணுவது கடினமான வேலையாகும் . மறுரூபமாக்குவது தேவனுடைய வல்லமை என்றாலும், மற்றவர்கள் நம் முன்னேற்றத்தைப் பார்க்கவும், நம் முன்மாதிரிகளைப் பின்பற்றவும் போகிறார்கள் என்றால், நம்முடைய முழு முயற்சியும் அதில் தேவைப்படுகிறது . இந்த முயற்சி நம் வாழ்வில் பலனைத் தருவது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் இரட்சிப்புக்கு அழைத்துச் செல்லும் என்ற உறுதியை தேவன் நமக்குத் தருகிறார்.

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , தயவு செய்து என் நம்பிக்கை, தைரியம்,விடாமுயற்சி, உறுதி ஆகிய காரியங்களை என்னில் அதிகப்படுத்தும் , அதனால் நீர் என் மீது அருளிய இரட்சிப்பை, எனது போதனையினாலும், எனது வாழ்க்கையின் மாதிரியின் மூலமாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அடியேன் விரும்புகிறேன் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து