இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நமது செல்வ செழிப்பை எது தீர்மானிக்கிறது? பணம் , உடைமைகள், நிலம் அல்லது முதலீடுகளின் அடிப்படையில் அதைக் கணக்கிடுகிறோமா? மேலான ஆதாயம், அவைகளை கணக்கிட முடியாத அளவிற்கு விலையேறப்பெற்ற ஆதாயம், உண்மையில் ஒரு நேரடியான சூத்திரத்தால் தீர்மானிக்கப்படுகிறது என்று பவுலானவர் தீமோத்தேயுவுக்கு நினைவூட்டினார்: மெய்யான நிகர மதிப்பு = (தேவனுடைய குணாதிசயம் ) X (போதுமென்கிற மனம் ). தங்கள் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் இயேசுவுக்குள்ளாய் போதும்மென்கிற மனதோடு கூடிய தேவனுடைய குணம் கொண்டவர்களே மெய்யான செல்வ சீமான் என்பதை நாம் உணர்ந்தால் என்ன நடக்கும்?

என்னுடைய ஜெபம்

தேவனே , ஒவ்வொரு ஆசீர்வாதமும் யாரிடமிருந்து வருகிறது, இந்த உலகத்தின் பேராசையிலிருந்து எனது மதிப்புகளை ஆவிக்குரிய மேலான பரிசுத்த ஐஸ்வரியத்தின் மேல் நம்பிக்கை வைக்கவும் - மெய்யான ஆதாயம் உம்முடைய குணத்திலும் மற்றும் உண்மையான போதும்மென்கிற மனநிறைவிலும் காணப்படுகிறது. இயேசுவானவர் தம்முடைய அநுதின வாழ்வில் வெளிப்படுத்திய பிதாவின் குணாதிசயத்தை போலவே என்னுடைய குணாதிசயங்கள் இருக்கும்படிச் செய்யும் . உமக்குள்ளாய் மாத்திரமே கிடைக்கக்கூடிய போதும்மென்கிற மனநிறைவை எனக்குக் கற்றுத் தாரும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து