இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்முடைய "வார்த்தை " எவ்வளவு முக்கியமானது என்பதை நேற்று யாக்கோபு ஆசிரியர் நமக்கு நினைப்பூட்டினார். இன்று அவர் நமது "நடக்கையின்" முக்கியத்துவத்தைப் பற்றி நமக்கு நினைப்பூட்டுகிறார்: நாம் தேவனுக்கு முன்பாக மரியாதையுடன் பேசவும் நடக்கவும் அழைக்கப்பட்டுள்ளோம்! தேவபக்தி என்பது வெறும் வாயின் வார்த்தைகளினால் ஆனது மாத்திரம் அல்ல . இயேசு கிறிஸ்துவைப் போலவே நாமும் வாழ வேண்டும், நேசிக்க வேண்டும் என்பதேயாகும் . தேவன் எப்பொழுதும் விதவைகள் மற்றும் திக்கற்ற பிள்ளைகளை கவனித்துக்கொள்ள தம் மக்களை அழைத்துள்ளார், மேலும் மறக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட , மற்றும் தங்களை அந்நியர்களாக என்னும் எளியவர்களுக்கு நாம் மெய்யான உதவியை வழங்குமாறு அவர் நமக்கு கட்டளையிடுகிறார் (உபாகமம் 15:1-18). இயேசுவின் சீஷர்களாகிய நாம், தேவனுக்கு நம்மைப் பரிசுத்தமாக ஒப்புவித்து எளியவர்கள் மீது அக்கறை காட்ட வேண்டும். இயேசுவின் சகோதரரான யாக்கோபு (யோசேப்பின் குமாரன்) , "கிறிஸ்துவைப் போல வாழ்வது " என்பது இதுதான் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்!

என்னுடைய ஜெபம்

அன்புள்ள தேவனே , உம்முடைய ஆசீர்வாதம் தேவைப்படும் மக்களைப் பார்க்கும்படி எனக்கு தெளிவான கண்களைத் தந்தருளும் . எங்கள் திருச்சபையிலே உள்ளவர்கள் மற்றும் என்னை சுற்றியுள்ள மக்கள் , உடன் வேலை செய்யும் நண்பர்கள் மற்றும் என்னுடன் பள்ளியில் உள்ள மக்கள் தங்களை மறந்துவிட்டதாகவும், கவனிக்கப்படாமல் இருப்பதாகவும் உணரும் போது, தயவுசெய்து அவர்களிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள். அவர்களைப் பார்ப்பது மட்டுமல்லாமல், அவர்களைச் சேர்த்துக்கொள்ளவும் எனக்கு உதவுங்கள், இதனால் அவர்கள் மீதான உம் அன்பை அவர்கள் அறிய முடியும்! இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து