இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

காயமடைந்தவர்களால் நிறைந்த ஆழமான உடைந்த உலகின் ஒரு அங்கமாக நாம் இருக்கிறோம். நம்மைச் சுற்றியுள்ளவர்கள் - அல்லது உள்ளான மனுஷன் - பாடுகளையும், தாங்க முடியாத வேதனையையும் அனுபவிக்கும் நேரங்களில் , அந்த சூழ்நிலைகளை மாற்றவோ அல்லது துன்பத்தைத் தணிக்கவோ முடியாத வேளைகளில் நாம் எளிதில் சோர்ந்து போகிறோம் . அவ்வேளைகளில் உதவிச் செய்யவோ அல்லது நிரந்தர தீர்வுக்கொண்டு வரவோ நமக்கு எந்த பெலனும் ஞானமும் இல்லை என்பதை நாம் உணர்கிறோம். இருப்பினும், விசுவாசிகளாக , நாம் தேவனின் உதவியை எப்பொழுதும் தேடலாம் ! இஸ்ரவேலின் உடன்படிக்கையின் தேவனாகிய கர்த்தர், தம்முடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றியவர், தம்முடைய மக்களைப் பாதுகாத்து, கடந்த காலத்தில் தம்முடைய ஜனங்களுக்கு மேசியாவை கொடுத்தவர் , இன்று நமக்காகவும் , நாம் யாருக்காக ஜெபிக்கிறோமோ அவர்களுக்காகவும் உறுதுணையாக நிற்கிற தேவன் அவரே . நிச்சயமாக, தேவனானவர் நம்மை பாதுகாக்க அல்லது நம்மை மீட்க காண்கிறவராகவோ , கேட்பவராகவோ அல்லது கவனிக்கிறவராகவோ இல்லை என்பதுபோல தோன்றும் தருணங்கள் அநேகம் உள்ளன. அத்தருணங்களில், நாம் பயப்படுவதில்லை , சந்தேகப்படுகிறதில்லை மற்றும் கோபமாயிருக்கிறதில்லை என்பது போல நடிக்கிறோம் . அப்படியல்ல ! நாம் நம் ஆண்டவரிடம் நேர்மையாக, வெளிப்படையாக கேட்க வேண்டும், மன்றாட வேண்டும்.. அவர் கடந்த காலத்தில் தனது மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு,இரட்சித்து , தலையிட்டு, விடுவித்துள்ளார். நம்முடைய கர்த்தராகிய தேவனை, அதே தேவனை, நமக்காகவும், நம் நாளில் நாம் நேசிக்கிறவர்களுக்காகவும் அவருடைய வேலையைச் செய்யும்படி அழைப்போம் . நாம் ஜெபம் செய்வோம் :கர்த்தாவே, எழுந்தருளும்; தேவனே உம்முடைய கையை உயர்த்தும்; ஏழைகளை மறவாதேயும்.

என்னுடைய ஜெபம்

நம்பிக்கையின் தேவனே , எங்கள் இருண்ட மற்றும் அச்சுறுத்தும் நாட்களில் எங்களிடமிருந்து வெகு தூரமாய் இருக்க வேண்டாம். தயவுசெய்து வாழ்க்கையின் மகிழ்ச்சியையும் நல்ல காரியங்களுக்கான நம்பிக்கையையும் மீட்டெடுத்தருளும். தயவு செய்து எங்கள் வலி மற்றும் வேதனையின் போது எங்களுக்கு ஆறுதல் செய்யும் . எங்கள் நேரம், குடும்பங்கள், கலாச்சாரம், சபைகள் மற்றும் எங்களுக்கு மனந்திரும்புதலையும் புதுப்பிப்பையும் கொண்டு வர உம்முடைய வல்லமையுள்ள கரங்களை உயர்த்தியருளும் . உம் கிருபை மற்றும் இரக்கத்தால் , தயவுசெய்து சுகத்தையும் மீட்பையும் கொண்டு வாரும் . இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து