இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
பெரும்பாலும், நாம் அறியாமையால் செயல்படுகிறோம், அவசரப்பட்டு வழிநடத்தப்படாத செயல்களுக்கு கடுமையான விளைவுகளை சந்திக்கிறோம். ஞானமான தேர்வுகளைச் செய்ய உதவுவது மட்டுமல்லாமல், கிருபையுடனும் ஞானத்துடனும் செயல்படவும் எதிர்வினையாற்றவும் நமக்குத் தேவையான ஆவிக்குரிய ஞானத்தை தேவன் நமக்கு வழங்க விரும்புகிறார். சவாலான சூழ்நிலைகள் மற்றும் முடிவுகளுடன் ஒரு புதிய நாளை எதிர்கொள்வதற்கு முன், தேவனின் முகத்தைத் தேடி, அவருடைய ஞானத்தின் ஈவை கேட்போம்.
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமுள்ள பிதாவே, இன்று நான் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சூழ்நிலைகளில் சரியான முடிவுகளை எடுக்க எனக்கு உமது ஞானம் தேவை. என் செயல்கள், வார்த்தைகள் மற்றும் தேர்வுகள் உம்மைப் பிரியப்படுத்தவும் , என்னைச் சுற்றியுள்ளவர்களை ஆசீர்வதிக்கும் வகையில், உமது ஞானத்தை என் இருதயத்தில் ஊற்றியருளும் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.