இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தாழ்மை என்பது நமது வாழ்க்கை முறையில் மிகவும் மதிப்புமிக்க சொத்து அல்லது மிகவும் விரும்பத்தக்க குணம் அல்ல. ஆனால், தாழ்மை மிகவும் தேவையான ஒன்றாகும் - அது கட்டளையிடப்பட்டதால் அதிக கடினமானதில்லை, ஆகையால் தாழ்மையை நாம் "எப்படியாயினும் பெற்றுக்கொள்ள வேண்டும் ". ஒவ்வொரு ஆண்டும் நீதியிலும் , குணாதிசயத்திலும் மற்றும் ஆவிக்குரிய காரியங்களிலும் பெரிதான தோல்விகள் மற்றொரு அலையை நம் வாழ்வில் கொண்டுவருகிறது. நம்முடைய ஷேமமான நாட்களில் கூட, நாம் அனைவரும் தேவனுடைய பரிசுத்தத்திலிருந்து வீழ்ந்துப்போகிறோம். நற்பண்புகளில் (தாழ்மை) முன்னேறுவதற்குப் பதிலாக, நாம் அவற்றில் பின்னடைவதை காண்கிறோம். நம்மை தாழ்த்தி, ஜெபம்பண்ணி, அவருடைய முகத்தைத் தேடி, நம் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால் தேவனை அணுகமுடியும். ஆகவே, நாம் மனத்தாழ்மையுடன் இருந்து நம்முடைய பாவங்களைத் புறம்பே தள்ளி , தேவனை நோக்கி கூப்பிட்டு, அவரைத் முழுமனதுடன் தேடுவோமாக!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் சர்வவல்லமையும் கொண்ட தேவனே , உமது செயல்கள் அற்புதமானவைகள் ,நீர் உண்மையுள்ளவர் என்பது மகத்தானது, உமது இரக்கமும், கிருபையும் அத்தகைய சிறந்த ஆசீர்வாதங்கள். ஆயினும், உமக்கும் அடியேனுக்கும் இடையே உள்ள தூரம் நம்பமுடியாதது , அப்படிப்போல உம்முடைய பரிசுத்தமும், மேன்மையும் அடியேனுடைய பெலவீனங்களுக்குமுள்ள தூரமும் அதிகம் ஆயினும் நீர் என்னருகில் இருந்து எனக்கு செவிக்கொடுக்கிறீர் என்பதை அறிந்து உம்மிடம் வருகிறேன். நீர் மிகவும் அற்புதமாய் எங்களை ஆசீர்வதித்ததை நானும், என் உறவுகளும் , என்னைச் சுற்றியுள்ள தேசமும் தவறவிட்டு விட்டோம் என்று ஒப்புக்கொள்கிறேன். இந்த நேரத்தில் உம்மை தெளிவாய் அறிந்துகொள்ளும் வகையில் எங்கள் தேசத்தில் நீர் இருக்கிறதை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவைகளை அடியேன் இயேசுவின் நாமத்தின் மூலமாய் விசுவாசத்தோடு கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து