இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்முடைய தேவன் ஆராய்ந்து முடியாதவர். அவர் பாவம் என்ன என்பதை மாத்திரம் சொல்லாமல் அவைகளை ஜெயித்து வெற்றிச் சிறந்தார் ; அவர் நம்முடைய பாவங்களை மன்னிப்பதன் மூலமும், எல்லா அநியாயங்களிலிருந்தும் நம்மைச் சுத்திகரிப்பதன் மூலமும் நாம் பெறவேண்டியதான தண்டனையிலிருந்தும் நம்மை விடுவிக்கிறார். உண்மையான குணப்படுத்துதல் என்பது நோயுற்ற மாம்ச சரீரத்தை குணப்படுத்துவதைக் காட்டிலும் மேலானது - மேலும் அவர் நமக்கு மாம்ச ரீதியான சுகத்தை வழங்கியதற்காக நாம் தேவனைப் போற்றுகிறோம். எவ்வாறாயினும், மெய்யான குணப்படுத்துதல் என்பது, நமது ஆவியில் தோய்ந்து , நமது ஆத்துமாவையும், சரீரத்தையும் ஆரோக்கியமற்றதாக்கும் விஷயங்களிலிருந்து நாம் மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்படுகிறோம் என்பதாகும். நம் ஒவ்வொருவருக்கும் முதிர்வயதான காலத்திலே இந்த நன்மையை மாத்திரமே ஒரு பகுதியாக தேவன் வழங்குகிறார்! "தேவனுக்கு மகிமை உண்டாவதாக " என்று சொல்லி ஆர்ப்பரிப்பதில் எந்த ஆச்சரியமுமில்லை.

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , என் பாவத்திலிருந்து அடியேனை மன்னித்து, சுத்திகரித்த உமது இரக்கத்துக்காகவும், கிருபைக்காகவும் நான் உம்மை எப்படிப்பட்ட வார்த்தைகளை கொண்டு போற்றினாலும் அவைகள் போதுமானதாய் இருக்குமோ?. அடியேனை மன்னிக்கப்பட்டு உம்முடைய குடும்பத்திலே அங்கத்தினராய் சேர்க்கப்பட்டதன் மகிழ்ச்சியை மறக்காமல் இருக்க எனக்கு உதவியருளும் . உம்முடைய மாபெரிதான இரட்சிப்புக்காக நன்றி. இயேசுவின் நாமத்தினாலே நான் உன்னைப் போற்றுகிறேன் துதிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து