இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சுவிசேஷம், சாட்சி கொடுத்தல் மற்றும் திட்டமிடப்பட்ட வீடுகள் சந்திப்பு ஆகியவை சில நேரங்களில் செல்ல முடியாத இடங்களில் கூட பாடல்கள் செல்கின்றன. ஒரு பாடலின் வழியாக வேதாகமத்தில் உள்ள ஒரு வரலாற்று சம்பவத்தை சொல்லலாம் , துதிகளை செலுத்தலாம் , இருதயங்களைத் திறக்கும் மற்றும் உணர்ச்சிகளைத் தூண்டும் சத்தியத்தை அறிவிக்கலாம் . பாடல்கள் நம் ஆத்துமாக்களுக்கு ஜீவனை கொடுக்கின்றன மற்றும் தேவனால் நமக்குள் ஆழமாகவும் புதைக்கப்பட்டிருக்கும் அடிப்படையான அந்த முதன்மையான காரியத்தை தட்டி எழுப்புகிறது . நீங்கள் உங்களுடைய நண்பர்களைச் சுற்றி இருக்கும்போது, ​​ சுவிசேஷத்தை சொல்ல முயற்சிக்கிறீர்கள், அப்பொழுது அவர்கள் விரும்பும் வண்ணமாக பாடல்கள் வழியாக அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள் . நேரம் கிடைக்கும்போது, ​​சுவிசேஷத்தின் செய்தியை மெல்லிசை மற்றும் உற்சாகமுள்ள பாடல்களின் மூலமாக பகிர்ந்துகொண்டு அவர்களுக்கு சுட்டிக்காட்டுங்கள். நமது வீடுகளில் மற்றும் சபைகளில் மட்டுமல்ல, நம் நண்பர்கள் மற்றும் கலாச்சாரங்கள் முழுவதும் நாம் அவரைப் போற்றி துதிப்பதை தேவனானவர் விரும்புகிறார். நம் மீட்பரின் அன்பின் "உள்ளம் நிறைந்த பாடலை" மற்றவர்கள் அறிய உதவும் விதத்தில் நாம் பாட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். எனவே எல்லா மக்களிடையேயும் தேவனின் அன்பைப் பிரசித்தப்படுத்தி பாடுவோம்!

Thoughts on Today's Verse...

Songs go where evangelism, witnessing, and planned outreach sometimes cannot go. Songs tell a story, offer praise, and deliver truth in a package that opens hearts and stirs emotions. Songs give life to our souls and stir something primal buried deep inside us by God. When you are around friends you are trying to reach with the Gospel, listen for the kind of music they like. Then when the time is right, point them to songs that share the message of the Gospel with a melody and beat that can stir their hearts. God wants us to praise him — not just in our sanctuaries and churches, but with our friends and across cultures. He wants us to sing in ways that help other people know the "heart song" of our Redeemer's love. So let's sing of God's love among all the peoples!

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே மற்றும் நீதியுள்ள பிதாவே , ஆவிக்குரிய பாடலின் ஈவுக்காக உமக்கு மிக்க நன்றி. எங்கள் இருதயத்தின் மனநிலையையும் உமது கிருபையுள்ள வார்த்தையையும் கொண்டு , மற்றவர்களை விசுவாசத்திற்கு நெருக்கமாக நகர்த்த உதவும் அருமையான பாடல் வரிகளுக்காக உமக்கு கோடான கோடி நன்றி. கிறிஸ்தவப் பாடல்களை அநேக மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், உம்முடைய வசனமாகிய வார்த்தையை மக்களுக்குப் புரிய வைப்பதிலும் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும் . உம்முடைய திருச்சபையிலே வல்லமையாய் பாடுவதற்கு எங்களுக்கு அதிகாரம் கொடுங்கள், மேலும் பூமியிலுள்ள அனைத்து மக்களையும் சென்றடையும் வழிகளில் உம்முடைய இரட்சிப்பைப் குறித்து பாடல்கள் பாட எங்களுக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Almighty God and righteous Father, thank you so much for the gift of song. Thank you for lyricists that capture the mood of our hearts and the word of your grace and help move others closer to faith. Please bless all those involved in bringing Christian songs to the public and making your Word more understandable to the masses. Empower singing in your Church, and help us to sing of your salvation in ways that reach all peoples on the earth. In Jesus' name I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of சங்கீதம் - 108:3

கருத்து