இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தயவாயும் மனஉருக்கமாயும் இருங்கள் - இந்த இரண்டு குணங்கள் நம்மிடம் குறைவாக இருப்பதாகத் தெரிகிறது. ஒருவேளை நாம் தவறான முன்னோடிகளை வைத்திருப்பதால் அப்படி இருக்கலாம். துரதிஷ்டவசமாக, இந்த இரண்டு குணங்களும் வலிமையைக் காட்டிலும் பலவீனத்தின் அறிகுறிகளாகக் காணப்படுகின்றன. தேவன் உங்களுக்கு மன்னித்தது போல, நீங்களும் ஒருவருக்காருவர் மன்னிப்பதற்கு உங்களுக்கு மிகுந்த தைரியமும், பெலமும் தேவை. அதனால் நாம் பெலமுள்ளவர்களாக இருப்போம்!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே , அடியேனை மன்னிக்க நீர் இவ்வளவு பெரிய தியாகம் செய்ததற்காக நான் போதுமான அளவு நன்றி சொல்ல என்னால் இயலவில்லை . எனவே இந்த நாளில், நான் உம்மைப் போலவே இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்: எனக்கு தீமை செய்தவர்களுடன் உம்முடைய தயவையும் , கிருபையையும் பகிர்ந்து கொள்வேன். இன்று, மற்றவர்கள் மீதான எனது கசப்பை விடுவிக்க எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன், மேலும் இந்த சகோதரனை உம்முடைய தயவினாலும், கிருபையினாலும் ஆசீர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இயேசுவின் வல்லமையினால் நான் இதைக் கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து