இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்களுடைய சபையை குறித்து எப்படிப்பட்டதான நற்சாட்சி உள்ளது? நீங்கள் கலந்துகொள்ளும் சபைக்கான உங்கள் திட்டம் என்ன? உங்களுடைய சிறிய குழுக்கள் ( இரண்டு மூன்று விசுவாசிகள் வேத ஆராய்ச்சிக்காக / ஐக்கியத்திற்காக கூடி வருகிறவர்கள் ) , வாழ்க்கைக்கான குழுக்கள் (பத்திற்கு மேற்பட்ட விசுவாசிகள் ஐக்கியத்திற்காக கூடுபவர்கள் ) அல்லது வீடுகளில் கூடி வருகிறதான சபையின் நோக்கம் என்ன? நம்மில் அநேகர் நம்முடைய சபைக்கு இத்தகைய குறுகிய நோக்கங்களைக் கொண்டுள்ளனர். தெசலோனிக்கேயில் உள்ள சபையானது சில மாதங்களேயானது , மேலும் அந்த விசுவாசிகளின் விசுவாசத்தை பகிர்ந்து கொள்வதற்கான நற்சாட்சி ரோமானிய தேசம் முழுவதும் பிரசித்தமாயிற்று . இப்போது நான் பணிபுரியும் சபையும் அப்படிப்பட்ட நற்சாட்சியை பெற விரும்புகிறேன்! என்று பவுல் கூறுகிறார். உங்களுடைய விருப்பம் என்ன?

Thoughts on Today's Verse...

What kind of reputation does your church have? What is your dream for the congregation you attend? What's the mission of your small group, life group, or house church? So many of us have such short-sighted goals for our congregations and groups. The church at Thessalonica was only a few months old, and the believers' reputation for sharing their faith had become known throughout the Roman Empire. Now that's the kind of reputation I want the congregation and groups I work with to have! How about you?

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய ஆண்டவரே, தயவுசெய்து எங்கள் சபையையும் இன்னுமாய் சிறிய குழுக்களையும் உமது பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிரப்புங்கள், இதனால் பெலத்துடனும், தைரியத்துடன், நாங்கள் இயேசு கிறிஸ்துவை கொண்டு உமது கிருபையின் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வோம். தயவு செய்து எங்கள் சுவிசேஷகர்கள் , ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் உம் சமூகம் இருப்பதாக , இதனால் நாங்கள் இரட்சிப்பின் நற்செய்தியை எல்லா இடங்களிலும் எங்கள் நண்பர்கள், அயலகத்தார் மற்றும் உலகமெங்கும் உள்ள மக்களுக்குக் காண்பிக்கவும் அறிவிக்கவும் முடியும். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

O Lord God Almighty, please fill our congregation and groups with the power of your Holy Spirit so that with sensitivity and courage, we may share the good news of your grace in Jesus Christ. Please be with our missionaries, ministers, and members so that we may display and declare the Gospel of salvation to our friends, neighbors, and people everywhere. In Jesus' name, I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of 1 தெசலோனிக்கேயர் - 1:8

கருத்து