இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்முடைய நடக்கையானது தேவனுக்கு விரோதமான குணாதிசயங்கள் மற்றும் பரிசுத்தமில்லாத காரியங்களை தேர்ந்தெடுத்த வேளைகளில் நம் மீது அநேக நேரங்களில் தேவனானவர் வெறுப்படைந்திருப்பார் என்று முழுநிச்சயமாய் நம்புகிறேன். சந்தேகத்திற்கு இடமின்றி, நாம் எவ்வளவேணும் தகுதியற்றவர்களாய் இருந்தபோதிலும் அவர் நம்மை ஆசீர்வதிக்கச் செயல்படும் அநேக தருணங்கள் உள்ளன, ஏனென்றால் நாம் அவருடைய நாமத்தை தரித்துக் கொண்டிருக்கிறோம், மேலும் அவர் நம்மீது கிருபையையும், இரக்கத்தையும் காண்பிக்க விரும்புகிறார். மெய்யாகவே , நாம் கூக்குரலிட்டு, நம்முடைய பாவங்களையும் குறைகளையும் அவரிடம் அறிக்கையிடும்போது அவர் நம்மை மன்னிக்கும் , நம் இரட்சகராகவே எப்பொழுதும் இருக்கிறார். நாம் எப்படி அவருக்கு உகந்தவராக இருக்க வேண்டுமோ, நாம் அப்படியாக இல்லாவிட்டாலும், தேவனானவர் நம்மை விடுவித்து, அவருடைய நாமத்தின் மகிமையைக் காக்க இரக்கத்துடன் செயல்படுகிறார். தேவன் எப்பொழுதுமே நம் மெய்யான இரட்சகரும் அன்பான மீட்பருமானவர், எனவே அவருடைய நாமத்திற்கு மகிமை கொண்டுவர நாம் உணர்ச்சியுடன் வாழ்வோம்!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் நீதியுமுள்ள தேவனே , எங்கள் இரட்சகரும் அப்பா பிதாவுமானவரே , தயவுசெய்து எங்கள் பாவங்கள் , உம்மை எதிர்த்து நின்ற வேளைகள் , தோல்விகள் மற்றும் மாயமான வாழ்க்கைக்காக அடியேனை மன்னியுங்கள். எங்கள் பாவத்தினால் உண்டாகும் விளைவுகளிலிருந்து மாத்திரமல்ல, உமக்கான எங்கள் உறுதிப்பாட்டை ஊடுருவிச் செல்லும் அற்பத்தனத்திலிருந்தும் எங்களை விடுவித்தருளும் . உம்முடைய மகிமையையும், உமது நாமத்தின் மகிமையையும் தேட உமது பரிசுத்த வைராக்கியத்தை எங்களிடம் அனல்மூட்டி எழுப்பியருளும் . நீர் ஒருவரே, தேவன் , எங்களை விடுவிப்பவர் ! உம் குமரனாகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து